"மகாராஷ்டிராவில் இந்தி படங்கள் முதலிடத்தில இருக்கு; ஆனா மராத்தியப் படங்கள்..!"- ரித்தேஷ் தேஷ்முக்
சமீபத்தில் நடைபெற்ற 'Creative Economy Summit' நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ரித்தேஷ் தேஷ்முக், மராத்திய திரைத்துறை இன்று எதிர்கொண்டு வரும் சவால்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
"மகாராஷ்டிராவில் மராத்திய மொழி பேசும் மக்கள் சுமார் 11 கோடி பேர் இருந்தாலும் அங்கு மராத்திய படங்களை விட இந்தி படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இதனால் மராத்திய சினிமாவுக்கான திரையரங்கு வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.
மராத்திய படங்கள் பொதுவாக 3 கோடி ரூபாய் முதல் 7 கோடி ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் எடுக்கப்படுகின்றன.
ஆனால், திரையரங்குகளில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஒரு இந்தி படத்திற்கு வழங்கப்படும் அதே டிக்கெட் விலையே இதற்கும் நிர்ணயிக்கப்படுகிறது.
இதனால் மக்கள் பெரிய பட்ஜெட் படங்களையே தேர்ந்தெடுக்கின்றனர். தமிழ்நாடு, கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு மகாராஷ்டிராவில் மராத்திய மொழி படங்களுக்குக் கிடைப்பதில்லை.
மகாராஷ்டிராவில் முதலிடத்தில் இந்தி படங்கள் இருக்கின்றன. மராத்திய படங்கள் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. 
தரமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அதே சமயம் பெரிய பட்ஜெட்டில் மக்களைக் கவரும் வகையில் படங்களை உருவாக்கினால் மட்டுமே மராத்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியும்" என்று பேசியிருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0