வால்பாறையில் கடும் இழுபறி; திமுக, தவெக மாறி மாறி முன்னிலை; தற்போதைய நிலவரம் என்ன?

May 04, 2026 - 14:02
0
வால்பாறையில் கடும் இழுபறி; திமுக, தவெக மாறி மாறி முன்னிலை; தற்போதைய நிலவரம் என்ன?

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் த.வெ.க. வேட்பாளர்கள் அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

வால்பாறை தொகுதியில் தி.மு.க-வில் சுதாகர், அ.தி.மு.க-வில் லட்சுமணன் சிங், த.வெ.க-வில் ஸ்ரீதரன், நா.த.க-வில் உமாதேவி போட்டியிடுகின்றனர். இதில் தி.மு.க, த.வெ.க. இடையே கடும் இழுபறி நிலவி வருகிறது. இரண்டு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை பெற்று வருகின்றனர்.

இருப்பினும் அ.தி.மு.க-வும் விடாமல் போராடி வருகிறது. இத்தொகுதியில் 11 வது சுற்று முடிவுகளின்படி தி.மு.க. வேட்பாளர் சுதாகர் 31,111 வாக்குகளும், த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீதரன் 30,998 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் 30,743 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

வெறும் 113 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் சுதாகர் முன்னிலை வகிக்கிறார். இதனால் வெற்றி பெறுவது யார் என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User