'எம்.எல்.ஏக்களிடம் ராஜினாமா கடிதம் வாங்கினாரா முதல்வர் விஜய்?' - உண்மை என்ன?

Nov 12, 2026 - 17:30
0
'எம்.எல்.ஏக்களிடம் ராஜினாமா கடிதம் வாங்கினாரா முதல்வர் விஜய்?' - உண்மை என்ன?

தவெக எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் நேற்று தனியார் விடுதியில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில், எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரிடமும் விஜய் ராஜினாமா கடிதத்தை வாங்கி வைத்து கண்டித்து அனுப்பியதாக ஒரு தகவல் வெளியானது.

CM Vijay
CM Vijay

சமூகவலைதளங்களிலும் இந்த விஷயம் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையிலேயே விஜய் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கினாரா? என்னதான் நடந்தது?

இதுதொடர்பாக முதல்வருக்கு நெருக்கமான சீனியர்கள் சிலரிடம் பேசினோம், 'முதல்வர், ஆதவ், ஆனந்த் ஆகியோர் சில எம்.எல்.ஏக்களை கண்டித்து எச்சரிக்கை விடுத்தது உண்மைதான். ஆனால், வெளியில் பேசப்படுவதைப் போல எந்த எம்.எல்.ஏவிடமும் ராஜினாமா கடிதமெல்லாம் வாங்கி வைக்கவில்லை. அப்படி வாங்கி வைப்பதில் எந்த லாஜிக்குமே இல்லை.

CM Vijay
CM Vijay

ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய வேண்டுமெனில் அவரே கைப்பட எழுதிய கடிதத்தை சுயநினைவுடன்தான் ராஜினாமா செய்கிறேன் எனக் கூறி சபாநாயகரிடம் நேரில் கொடுக்க வேண்டும். சமீபத்தில் இசக்கி சுப்பையா ராஜினாமா செய்த போது டைப் செய்யப்பட்ட லெட்டரை கொண்டு வந்தார். உடனே சபாநாயகர் அவரது அறையிலேயே இசக்கி சுப்பையாவை உட்கார வைத்து கைப்பட ராஜினாமா கடிதம் எழுதி வாங்கிவிட்டுதான் அனுப்பினார்.

அப்படியிருக்க இப்போதே எம்.எல் ஏக்களை கூட்டி ராஜினாமா கடிதம் வாங்கிவிட்டார்கள் எனக் கூறுவது அபத்தமான செய்தி. நேற்று நடந்த சந்திப்பில் முதல்வர் எம்.எல்.ஏக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். எம்.எல்.ஏக்கள் சொன்ன குறைகளை அவரது டைரியிலேயே குறித்து வைத்துக் கொண்டு, 'எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்' என நம்பிக்கை வார்த்தை கூறியே அனுப்பினார். சில எம்.எல்.ஏக்களை கண்டித்து எச்சரித்தார். அவர்களிடமும் ராஜினாமா கடிதமெல்லாம் வாங்கவில்லை' என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User