GT vs CSK: "அவர் அணியில் இல்லாதது எங்களுக்குப் பெரிய இழப்புதான்" - யாரைச் சொல்கிறார் ருதுராஜ்?

May 22, 2026 - 11:31
0
GT vs CSK: "அவர் அணியில் இல்லாதது எங்களுக்குப் பெரிய இழப்புதான்" - யாரைச் சொல்கிறார் ருதுராஜ்?

ஐபிஎல் தொடரின் தனது கடைசி போட்டியை குஜராத்திற்கு எதிராக விளையாடிய சென்னை அணி, 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி, மூன்றாவது முறையாக பிளே-ஆஃப் செல்லாமல் தொடரை முடிக்கிறது.

இப்போட்டிக்குப் பின்னர் பேசிய கேப்டன் ருதுராஜ், "230 ரன்கள் என்பது பெரிய டார்கெட். அவர்களின் பந்துவீச்சுக்கு முன் அதை சேஸ் செய்வது சுலபம் இல்லை. இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று இறங்கினோம்.

GT vs CSK
GT vs CSK

ஆனால், அவர்கள் எல்லா டிபார்ட்மென்ட்டிலும் எங்களை விட அருமையாக விளையாடினார்கள். பவர்பிளேயில் அவர்களின் ஓப்பனர்ஸைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டோம்.

இந்தச் சீசன் ஆரம்பத்தில் ஹாட்ரிக் தோல்விகள் கிடைத்தாலும், பிறகு சரியான காம்பினேஷன் செட் ஆகி ஃபார்முக்கு வந்தோம். ஆனால், ஜேமி மற்றும் ஆல்ரவுண்டர் ராமகிருஷ்ணா கோஷ் காயமடைந்தது எங்களின் பிளேயிங் 11-ஐ ரொம்பவே பாதித்தது.

இந்தச் சீசன் மூலமாக எங்கள் பலவீனம் என்னவென்று கற்றுக் கொண்டோம். இந்த இளம் டீமை நினைத்துப் பெருமையாக இருக்கிறது, கண்டிப்பாக அடுத்த வருடம் இன்னும் ஸ்ட்ராங்காகத் திரும்பி வருவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

அடுத்த சீசனில் எம்.எஸ். தோனியைப் பார்க்க முடியுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த ருதுராஜ், "எனக்கே அடுத்த வருடம்தான் தெரியவரும். அவர் இல்லாதது எங்களுக்குப் பெரிய இழப்புதான். எதிரணியினருக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நபர் அவர்.

தோனி - சிஎஸ்கே
தோனி - சிஎஸ்கே

குறிப்பாக கடைசி ஓவர்களில் ஆட்டத்தின் போக்கையும், மொமண்டத்தையும் கிரீஸில் நின்றுகொண்டே மாற்றக்கூடியவர். எனவே, இந்தச் சீசனில் அவரை நாங்கள் மிகவும் மிஸ் செய்தோம் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்த சீசனைப் பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது, ஆனால் எங்களிடம் இருந்த வீரர்களைப் பற்றியும், இந்த வருடம் அவர்களுக்குக் கிடைத்த அனுபவத்தைப் பற்றியும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User