`ஹோட்டல் உரிமையாளருக்கு விற்கப்பட்ட சிறுமி' - 5 நாளில் 30 பேரால் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

Jun 29, 2026 - 11:31
0
`ஹோட்டல் உரிமையாளருக்கு விற்கப்பட்ட சிறுமி' - 5 நாளில் 30 பேரால் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனார். அந்த சிறுமி கைவண்டி இழுக்கும் ஒருவரிடம் சிக்கினார். அந்த நபர் அச்சிறுமியை ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடம் விற்பனை செய்துவிட்டு சென்றுவிட்டார். உடனே ஹோட்டல் உரிமையாளர் அச்சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்ய தொடங்கிவிட்டார். அதோடு பக்கத்து ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் தகவல் கொடுத்து அச்சிறுமியை அந்த ஹோட்டலுக்கு அனுப்பி வைத்தார். அச்சிறுமியை 5 நாட்களில் 30 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். அங்கிருந்து தப்பி வந்த சிறுமி இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஹோட்டல் உரிமையாளர்கள் குற்றத்தை மறைக்கவும் முயற்சி செய்துள்ளனர். அச்சிறுமி தெரிவித்த ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமி போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ஒரே நேரத்தில் பலர் பாலியல் வன்கொடுமை செய்யும் போது தனக்கு வலி ஏற்பட்டால் உடனே மது கொடுத்து குடிக்க சொன்னதாக தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.

உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் போராட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவோம் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.ருபிந்தர் சிங் தெரிவித்தார். ஸ்ரீகங்காநகர் நகரம் சுற்றுலா மையம் கிடையாது. அப்படி இருந்தும் 150க்கும் அதிகமான சட்டவிரோத ஹோட்டல்கள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அந்த சட்டவிரோத ஹோட்டல்களை மூடவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User