Gen Z Baba: `பாலியல் அத்துமீறல் செய்கிறார்கள்' - வைரல் ஜென் ஸீ பாபா மனவேதனை!

Nov 08, 2026 - 20:00
0
Gen Z Baba: `பாலியல் அத்துமீறல் செய்கிறார்கள்' - வைரல் ஜென் ஸீ பாபா மனவேதனை!

உத்தரப்பிரதேச மாநிலம் விருந்தாவனத்தைச் சேர்ந்தவர் ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ சாஷ்வத் (19). இளம் வயதிலேயே ஆன்மீகச் சொற்பொழிவுகள் ஆற்றி வரும் இவரை, இணையவாசிகள் பலர் 'ஜென் ஸீ பாபா' (Gen Z Baba) என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். விருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீதாம் கோடா விஹார் கோயிலின் பீடாதிபதியாக தன்னை அறிவித்துக்கொள்ளும் ஶ்ரீ சாஷ்வத், ஆன்மீகக் கூட்டங்கள், சொற்பொழிவுகள் தொடர்பான விடியோக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

ஸ்ரீ சாஷ்வத்
ஸ்ரீ சாஷ்வத்

இவரது ஆன்மீக உரையை விடவும் இவரது இளமையான தோற்றமே இவரை சமூக வலைதளங்களில் 'டிரெண்டிங்' ஆக்கியுள்ளது. தனது தோற்றத்தாலும், ஆன்மீக உரையாலும் சமூக வலைதளங்களில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தன் மீது சமூக வலைதளங்களில் இணையவாசிகள் தெரிவித்து வரும் கருத்துகள் குறித்து சாஷ்வத் ஆச்சார்யா மனம்திறந்து பேசியுள்ளார்.

அவர், ``பலர் இணையத்தில் பாராட்டுக்களைத் தெரிவித்தாலும், சிலரது கமென்ட்கள் தனிப்பட்ட எல்லைகளை மீறும் வகையிலும், எனக்கு ஒருவிதமான 'பாலியல் அத்துமீறல்' (Molested) உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கின்றன. எனக்கு வந்த இந்த சில கமென்ட்களுக்கே நான் இவ்வளவு வேதனைப்படும் போது, பெண்கள் தினமும் சந்திக்கும் கொடுமைகள் எவ்வளவு கொடூரமானவை என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. சிலர் நாகரிகத்தின் அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டனர். அந்த கமென்ட்களைப் படிக்கும் போது நாங்கள் மிகவும் அத்துமீறப்பட்ட உணர்வை அடைந்தோம். சமூக வலைதளங்களில் கண்ணியம் முற்றிலும் மீறப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User