"கவுதம் கம்பீரின் முரட்டுத்தனம் அவசியமற்றது"- இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி

Mar 24, 2026 - 16:01
 0
"கவுதம் கம்பீரின் முரட்டுத்தனம் அவசியமற்றது"- இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி

கவுதம் கம்பீரின் முரட்டுதனம் அவசியமற்றது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார்.

அவர் தலைமையில் இந்தியா அணி, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர், ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பையை வென்றிருக்கிறது.

கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர்

அதே சமயம் இவரது தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பல தோல்விகளையும் சந்தித்திருக்கிறது.

இந்நிலையில் 'Revsports' ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் சவுரவ் கங்குலி, கவுதம் கம்பீரின் முரட்டுத்தனம் அவசியமற்றது என்று பேசியிருக்கிறார்.

கம்பீர் குறித்து பேசிய கங்குலி, "கிரிக்கெட்டில், கம்பீரின் ஆக்ரோஷ குணம் அனைவரும் அறிந்ததே.

ஒரு வீரராகவும் பயிற்சியாளராகவும், அவரின் ஆக்ரோஷம் பல சமயங்களில் சாதகமாக அமைந்தாலும், களத்தில் மோதல்கள் ஏற்பட காரணமாக இருந்திருக்கிறது.

கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர்

கம்பீர் இந்த அளவு முரட்டுத்தனமாகவும், கடுமையாகவும் நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர் நல்ல மனிதர் தான். ஆனால் அவரின் திறமை மற்றும் அர்ப்பணிப்பு அணிக்கு பெரிய பலமாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0