சிங்கம் கூட சாதுதான்; 'இந்த 4' விலங்குகள் கிட்ட மனிதர்கள் மாட்டுனா அவ்வளவுதான்!

Mar 6, 2026 - 16:30
 0
சிங்கம் கூட சாதுதான்; 'இந்த 4' விலங்குகள் கிட்ட மனிதர்கள் மாட்டுனா அவ்வளவுதான்!

ஒரு காட்டிற்குள் செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். திடீரென்று நம் முன் ஒரு விலங்கு வருகிறது. என்ன செய்வோம்? 'அல்லுவிட்ரும்' அல்லவா... ஆனால், எல்லா வனவிலங்குகள் பார்த்தும் பயப்பட வேண்டாம் என்றும், வெறும் 4 விலங்குகள் தான் மனிதனை வேட்டையாடக் கூடும் என்று கூறுகிறார்கள்.

'ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?' என்ன சேதி என்று தெரிந்துகொள்வோம். வாங்க...

பொதுவாக வனவிலங்குகள் இயற்கையாகவே வேட்டையாடும் குணம் கொண்டவை. ஆனால் எல்லா விலங்குகளும் எப்போதும் மனிதர்களைத் தாக்குவதில்லை - பயந்து ஓடிவிடும் அல்லது கண்டுகொள்ளாமல் சென்றுவிடும்.

Forrest Galante
Forrest Galante

அவற்றைத் தொந்தரவு செய்தாலோ, அதற்குப் பசி மிகுந்தாலோ, வேறு உணவு கிடைக்காத நிலையிலோ மட்டுமே மனிதர்களை இரையாக்கும்.

ஆனால் இந்த நான்கு விலங்குகள் மட்டும் வேறு - இவை மனிதர்களை தங்கள் உணவுப் பட்டியலில் இயல்பாகவே சேர்த்து வைத்திருக்கின்றன. இவை மனிதர்களைப் பார்த்தால் கண்டிப்பாக வேட்டையாடும். ஏனெனில் இவை மனிதர்களை இரையாகப் பார்க்கின்றன.

இதை ஆராய்ச்சி செய்து தெளிவாகக் கூறியவர் Forrest Galante - அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல வனவியல் ஆராய்ச்சியாளர், சாகசப் பயணி மற்றும் வனவிலங்கு பாதுகாப்பாளர்.

அவர் Extinct or Alive என்ற நிகழ்ச்சி மூலம் அழிந்துவிட்டதாகக் கருதப்படும் உயிரினங்களைத் தேடி உலகின் மிக ஆபத்தான பகுதிகளுக்குச் சென்றுள்ளார். பல நேர்காணல்களில் மனிதர்களை தீவிரமாக இரையாகக் கருதும் நான்கு விலங்குகள் மட்டுமே உள்ளன என்று அவர் கூறியுள்ளார். இந்தக் கருத்து, அவர் நேரடியாகக் கள ஆய்வுகளில் பெற்ற அனுபவங்கள் மற்றும் பார்வைகளின் அடிப்படையிலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த நான்கு விலங்குகள்...

நைல் முதலை (Nile Crocodile) — ஆப்பிரிக்காவின் ஆறுகள் மற்றும் ஏரிகளில் வாழும் இது மிகவும் ஆபத்தான முதலைகளில் ஒன்று. மனிதர்களை ஸ்டாக் (stalk) செய்து காத்திருந்து தாக்கும்.

நைல் முதலை
நைல் முதலை
சிறுத்தை
சிறுத்தை

ஒரே இடத்தில் தண்ணீரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் கண்டிப்பாகத் தாக்குதல் நடத்தும். இது ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான மனித உயிரிழப்புகளுக்குக் காரணமாகிறதாம்.

சிறுத்தை (Leopard) — மிகவும் தந்திரமானவை. இரவில் மரங்களில் ஏறி ஒளிந்து கொண்டு மனிதர்களை எளிதாக வேட்டையாடும். இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் 'மேன்-ஈட்டர்' சிறுத்தைகள் பல உள்ளன - மனிதர்களை எளிதான இரையாகக் கருதித் தொடர்ந்து தாக்குமாம்.

புலி (Tiger) — உலகின் மிகப்பெரிய பூனை வகை விலங்கு. சில புலிகள் (குறிப்பாக இந்தியாவின் சண்டீர் புலிகள் போன்றவை) மனிதர்களை வேட்டையாடிப் பழக்கப்பட்டுள்ளன. அவை மனிதர்களை எதிரியாக அல்ல, உணவாகவே பார்க்கிறதாம்.

பனிக்கரடி (Polar Bear) — ஆர்க்டிக் பகுதியில் வாழும் இது மிகக் கொடூரமான வேட்டையாடி. உணவுக் குறைபாடு உள்ள இடங்களில் மனிதர்களை இயல்பான இரையாகப் பார்க்கும். இதனிடம் மாட்டிக்கொண்டால் அதைவிட மோசமான மரணம் இல்லை.

புலி
புலி
பனிக்கரடி
பனிக்கரடி

ஏனெனில் இது மிகப்பெரிய வலிமை, வேகம் மற்றும் கொடூரமான வேட்டை முறையைக் கொண்டது.

இந்த நான்கு விலங்குகள் மட்டுமே மனிதர்களை தீவிரமாகத் தேர்ந்தெடுத்து வேட்டையாடும் என்று கலாண்டே கூறுகிறார். மற்ற விலங்குகள் (சிங்கம், ஹைனா, உப்புநீர் முதலை போன்றவை) வாய்ப்பு கிடைத்தால் தாக்கலாம். ஆனால் இவைபோல மனிதர்களைத் தொடர்ந்து இரையாகக் கருதுவதில்லை.

ஆஹா... அலர்ட் ஆகுடா ஆறுமுகம்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0