ஈகோ அரசியலும், இந்திய ஜனநாயகமும்! - வாசகர் வாய்ஸ்

Oct 05, 2026 - 13:30
0
ஈகோ அரசியலும், இந்திய ஜனநாயகமும்! - வாசகர் வாய்ஸ்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

நமது இந்திய ஜனநாயகம் குற்றுயிரும் குலையுயிருமாக நடமாடிக் கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது.அதற்குக் காரணம் எல்லாப் பிரிவினருந்தான். அரசியல்வாதிகள், அதிகாரிகள்,அனைத்துப் பிரிவு மக்களும் என்று சொன்னால்,நம்புவது கடினமாகத்தான் இருக்கும்,ஆனால் ஆழ்ந்து பார்த்தால் அதிலுள்ள உண்மை புலப்படும்.

பெரும்பாலானவர்களின் ஈகோ (Ego-நான் என்னும் அகந்தை;நானே மேலானவன்;நானே சரியானவன் என்ற எண்ணம்)வே இந்திய அரசியலை ஆட்டிப் படைத்து வருகிறது.நிறைய உதாரணங்களை வாசகர்களே அறிவீர்கள். மாதிரிக்காக ஒன்றை மட்டும் பார்க்கலாம்.

    நமது தற்போதைய சட்டசபைக் கட்டிடம் பழையது என்ற ஒன்றைத் தவிர, பலத்திலோ,வலுவிலோ குறைந்ததாக எந்தப் பொறியாளரும் இது வரை சான்றளிக்கவில்லை.ஓமந்தூரார் அரசுத் தோட்ட வளாகத்தில் கலைஞர் புதிய சட்டசபைக் கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது?மன்றம் போதவில்லையா?

உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்ததா? பழைய சட்டசபைக் கட்டிடத்தில் தான் எல்லாவித வசதிகளும் இருந்தனவே!வேறு எதற்காக?தன் ஆட்சிக் காலத்தில் புதிய சட்டசபை திறக்க வேண்டுமென்ற ஈகோ!

கலைஞர் கட்டிய  கட்டிடத்தில், தான் சபையை நடத்தக் கூடாதென்ற ஈகோ. அது பன்முனை மருத்துவமனையாயிற்று. இன்றைய முதல்வர் விஜய்க்கோ தன் காலத்தில் பட்டினப் பாக்கத்தில் புதிய சட்டசபை கட்ட வேண்டுமென்ற ஈகோ! ஒரு நடுநிலை வகிப்பவனால் இவை எதையுமே ஏற்றுக் கொள்ள முடியாது.அரசியல்வாதிகளில் பெரும் பான்மையினர் மக்கள் நலனை மறந்து வெகு நாட்களாகி விட்டதாகவே தோன்றுகிறது.எத்தனையோ அவசியத் தேவைகளுக்காக மக்கள் அல்லும் பகலும்  போராடிக் கொண்டிருக்கையில்,தேவையற்றவைகளில்,அவர்கள் விருப்பப்படி செலவு செய்வதையே ஒவ்வொருவரும் நிறைவேற்றி வருகிறார்கள்.

அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை

புதிய சட்டசபை வேண்டுமென்று தனி மனிதர்களோ,மக்கள் நலச் சங்கங்களோ,ஏன்?சட்டசபை உறுப்பினர்களோ கூடக் கோரிக்கை வைத்ததாகக் கூடத் தெரியவில்லையே!

        ஜன நாயகத்தின் ஆணி வேரே,ஆளும் கட்சியல்ல;வலுவுள்ள எதிர்க்கட்சிதான்!

ஆனால் இன்று நமது நாட்டில்,வலுவுள்ள எதிர்க்கட்சியாக இருந்த ஒன்று, ஒவ்வொருவரின் ஈகோ காரணமாகப் பல துண்டுகளாகிச் சிதறிப் போய்க் கிடக்கிறது.

தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் விதமாக,எப்பொழுது தேர்தல் கமிஷனர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவிலிருந்து உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி நீக்கப்பட்டாரோ, அன்றே ஜனநாயகத்திற்குப் பேரிழப்பு ஏற்பட்டு விட்டது என்பதை உணராத அரசியல்வாதிகளையா நாம் கொண்டுள்ளோம்?இவ்வளவுக்கும் ‘நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே’என்ற உயரிய பரம்பரை என்று பீற்றிக் கொள்வதெல்லாம் வீண் என்றே தோன்றுகிறது!ஏன் உடனடி எதிர்ப்பை,அந்த முடிவை மாற்றிக் கொள்ளும் வலுவான எதிர்ப்பை, எதிர்க் கட்சிகள் முன்னெடுக்க வில்லை!இன்றைக்கு மட்டும் ஏன் போராட வேண்டும்?மக்கள் நலனில் அக்கறை கொண்டா?

தலைமை செயலகம்

சரி! நடைபெறுகிறன்ற போராட்டங்கள் கூட ஈகோவை அடிப்படையாகக் கொண்டவைதானே!அதனால் எந்த மாற்றமும் நிகழுமா?என்று கேட்டால் “நிகழாது”

என்பதுதானே உடனடி பதில்.

மத்திய கல்வி மந்திரியை ராஜினாமா செய்யச் சொல்லி தூக்கம் மறந்து,

தொல்லை பட்டு,அடி பட்டு,மிதி பட்டு,காலொடிந்து,கையொடிந்து கஷ்டப்பட்டு ராஜினாமா செய்ய வைத்தார்கள் இளைஞர்கள்!அதற்குப் பதிலாக விதிகளில் மாற்றங்கேட்டுப் போராடியிருந்தால் ஓரளவுக்காவது சமுதாயத்தினருக்கு ஏதாவது நல்லது நடந்திருக்கும்.அதில் முந்திக் கொண்டு நின்றது ஈகோதானே!ஆட்சியாளர்களின் ஈகோ ராஜினாமா செய்யக் கூடாது என்பது!போராட்டக்காரர்களின் ஈகோ ராஜினாமா செய்ய வைப்பது.ஈகோவில்

ஜெயிக்க இத்தனை ஆர்ப்பாட்டம் தேவையா?கிடைத்த பயன் என்ன?

இப்பொழுது ‘சீப் எலக்‌ஷன் கமிஷனர்’ ராஜினாமாவைக் கோருகிறார்கள்.அவர் போனால் வேறொருவர் வரப் போகிறார்.போகாவிட்டால் ஆளுங்கட்சி ஈகோ வெல்லும்;போனால் ஆர்ப்பாட்டக் காரர்களின் ஈகோ வெற்றி பெறும்!வேறு என்ன மாற்றம் நிகழ்ந்து விடப்போகிறது?

தற்பொழுது தேர்தல் ஆணையம் சில மாற்றங்களைச் செய்ய முன் வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிப்பதிலிருந்தே,தவறுகள் நடந்தது ஊர்ஜிதமாகிறது.தேர்தல் ஆணையர்களும்,மத்தியச் செயலரும் தேர்தல்கள் நடைபெறும் முன்னரே இக்குறைகளைப் பொது வெளியில் தெரிவிக்காதது ஏனென்று தெரியவில்லை.

மக்களில் பலரும் பல கட்சி ஆதரவாளர்களாக இருப்பது சரி!ஆனால் அவர்களின் தலைவர்கள் என்ன தவறு செய்தலும் அதற்கு ஆமாம் போடுவதுதான் சாதாரணமானவர்களின் ஈகோ!எங்கள் கட்சித் தலைவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் அவர்களைத்தான் ஆதரிப்போம் என்ற ஈகோ!

வயிற்று வலி இருக்கையில் ஒட்டிக்கொள்ளும் கூட்டணிகள்,பதவி என்று வருகையில் ஈகோ காரணமாகப் பிரிந்து விடுகின்றன.இதைத்தானே நாம் இவ்வளவு காலமும் பார்த்து வருகிறோம்!

பழையவர்களும் அதைத்தான் செய்கிறார்கள்.புதியவர்களும் அவற்றையே மேற்கொள்கிறார்கள்.ஈகோவை விட்டு இந்திய அரசியல்வாதிகள் மாறினால்தான்

மக்கள் நலம் பெறுவார்கள்!விடுவார்களா ஈகோவை என்று பார்ப்போம்!

-ரெ.ஆத்மநாதன்,

புளோரிடா.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!

இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User