த்ரிஷ்யம் 3: "ஜார்ஜ் குட்டியை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.!"- மோகன்லால் நெகிழ்ச்சி
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'த்ரிஷ்யம்'. ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப் படத்தில் மீனா மோகன்லாலுக்கு மனைவியாக நடித்திருப்பார்.
தமிழ், இந்தி போன்ற மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. முதல் பாக வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2021 ஆம் ஆண்டு வெளியானது.

இந்தப் பாகமும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மூன்றாம் பாகமான 'த்ரிஷ்யம் 3' வெளியாகி இருக்கிறது. மோகன்லால், மீனா, அன்சிபா ஹசன், எஸ்தர், அனில், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
வெளியான முதல் நாளே இப்படம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் மோகன்லால் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " 'த்ரிஷ்யம் 3' மிகுந்த அன்பு மற்றும் நன்றியுணர்வோடு உருவாக்கப்பட்டது. இப்படத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் அன்பு என்னை ஆழமாக நெகிழ வைக்கிறது.
Drishyam 3 was made with immense love, passion, and gratitude, and seeing that love come back through your response has been deeply moving. Your reviews, your words, and the emotions you have shared mean far more to me than any number ever can. Thank you for watching, for… pic.twitter.com/TklQuOpnZA
— Mohanlal (@Mohanlal) May 21, 2026
பாக்ஸ் ஆபீஸ் வசூலை விட, உங்கள் விமர்சனங்களும், உணர்வுகளும் எனக்கு மிகவும் மதிப்புமிக்கவை. ஜார்ஜ் குட்டியையும், அவரது குடும்பத்தையும் உங்கள் குடும்பமாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)