"பெட்ரோல் விலை உயர்வைப் பற்றிக் கவலையில்லை; ஈரானை வீழ்த்துவதே இலக்கு!" - அதிபர் ட்ரம்ப் உறுதி

Mar 6, 2026 - 16:30
 0
"பெட்ரோல் விலை உயர்வைப் பற்றிக் கவலையில்லை; ஈரானை வீழ்த்துவதே இலக்கு!" - அதிபர் ட்ரம்ப் உறுதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்க ஆட்டோமொபைல் சங்கத்தின் (AAA) தரவுகளின்படி, அமெரிக்காவில் பெட்ரோலின் சராசரி விலை கடந்த வாரத்தில் 27 காசுகள் உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கேலன் பெட்ரோல் சுமார் $3.25 (சுமார் ரூ.270) ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 15 காசுகள் அதிகமாகும். இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ``பெட்ரோல் நிலையங்களில் விலை உயர்வது குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. போர் முடிந்ததும் விலைகள் தானாகவே மிக விரைவாகக் குறைந்துவிடும். பெட்ரோல் விலைகள் ஒன்றும் அந்த அளவிற்கு அதிகமாக உயரவில்லை.

ட்ரம்ப்
ட்ரம்ப்

மேலும், பெட்ரோல் விலை சிறிது உயருவதை விட, இந்த ராணுவ மோதலில் நாம் எடுக்கும் முடிவுகள் மிக முக்கியமானது. விலை உயர்வைக் குறைக்க அமெரிக்கா வசம் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பான மூலோபாய பெட்ரோலிய ரிசர்வ்லிருந்து (Strategic Petroleum Reserve) எண்ணெயை வழங்கும் திட்டம் எதுவுமில்லை. ஈரான் முற்றுகையையும் மீறி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்துத் தொடரும்" என்றார்.

எண்ணெய் விலை உயர்வு குறித்து அதிபர் ட்ரம்ப் கவலைப்படவில்லை என்று கூறினாலும், வெள்ளை மாளிகை அதிகாரிகள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட், தலைமை அதிகாரி சூசி வைல்ஸ், எரிசக்திச் செயலாளர் கிறிஸ் ரைட் ஆகியோர் பெரிய எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விலை உயர்வு கட்டுக்கடங்காமல் போனால், அரசு தலையிட்டு விலையைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0