சென்னை: `நகை உலகம் இதுவரை கண்டிராத பிரமாண்டம்'- புதிதாக திறக்கப்பட்டுள்ள லலிதா ஜுவல்லரி 63 வது கிளை!

Apr 21, 2026 - 18:02
 0
சென்னை: `நகை உலகம் இதுவரை கண்டிராத பிரமாண்டம்'- புதிதாக திறக்கப்பட்டுள்ள லலிதா ஜுவல்லரி 63 வது கிளை!

லலிதா ஜுவல்லரி நிறுவனத்தின் 63 வது கிளை சென்னை தியாகராய நகரில் உள்ள உஸ்மான் சாலையில் இன்று திறக்கப்பட்டது.

நகை உலகம் இதுவரை கண்டிராத வகையில் மிக மிகப் பிரத்தியேகமான நகை ரகங்களை இந்த புதிய கிளையில் அறிமுகப்படுத்தி இருப்பதாகவும், அதற்கான பிரத்தியேக வடிவமைப்பாளர்களை கொண்டு இந்த நகைகள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், லலிதா ஜுவல்லரி நிறுவனத்தின் இயக்குநர் கிரண் குமார் தெரிவித்தார்.

மேலும், வேறு எந்த நகைக்கடைகளிலும் இல்லாத வகையில் மிக மிக குறைந்த சேதாரத்தில் தங்க நகைகளும், வைர நகைகளும் விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

லலிதா ஜுவல்லரி 63 வது கிளை
லலிதா ஜுவல்லரி 63 வது கிளை

புதிதாக திறக்கப்பட்டுள்ள 63 வது லலிதா ஜுவல்லரி கிளை நான்கு தளங்களுடன் இயங்குகிறது. இதில் முதல் இரண்டு தளங்கள் பிரத்தியேக தங்க நகைகளுக்காகவும், மூன்றாவது தளம் வைர நகைகளுக்காகவும்,

லலிதா ஜுவல்லரி 63 வது கிளை
லலிதா ஜுவல்லரி 63 வது கிளை

நான்காவது தளம் சில்வர் நகைகளுக்காகவும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் இந்த புதிய கிளை திறக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0