பாதமே நலமா - சீசன் 2: நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு; பாதநல விழிப்புணர்வு கருத்தரங்கம் அம்பத்தூரில்!

Mar 24, 2026 - 21:02
 0
பாதமே நலமா - சீசன் 2: நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு; பாதநல விழிப்புணர்வு கருத்தரங்கம் அம்பத்தூரில்!

கருத்தரங்கில் பங்கேற்க முன்பதிவு செய்ய க்ளிக் செய்க... https://tinyurl.com/4jcvm4vn

"சின்னப் புண்ணுதானே... தானா ஆறிடும்" என்று நாம் காட்டும் ஒரு சிறு அலட்சியம், சில நேரங்களில் ஒரு விரலையோ அல்லது பாதத்தையோ இழக்க நேரிட வைக்கிறது. கற்பனை செய்து பாருங்களேன்... மருத்துவரிடம் போகும்போது, "இந்த விரலை எடுக்க வேண்டும்" என்று அவர் சொன்னால் அந்த நிமிடம் எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும்!

எதனால் இந்த ஆபத்து வருகிறது? நீரிழிவு நோய் (Diabetes) உள்ளவர்களுக்கு மட்டும் ஏன் காலில் வரும் புண்கள் சீக்கிரம் ஆறுவதில்லை? குறிப்பிட்ட வயதுக்கு மேல் பாதங்களில் ஏன் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன? இதுபோன்ற கேள்விகளுக்கு, சரியான புரிதல் இல்லாத காரணத்தால், இன்றும் பலர் தங்களின் கால்களை இழந்து வருகின்றனர்.

மாபெரும் பாதநல விழிப்புணர்வு கருத்தரங்கம்!

உங்கள் பாதங்களைப் பாதுகாக்கவும், சர்க்கரை நோய் குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் டாக்டர் ஆர்.கே டயபெட்டிக் ஃபுட் அண்ட் பொடியாட்ரி இன்ஸ்டிடியூட் மற்றும் ஆனந்த விகடன் இணைந்து நடத்தும் 'பாதமே நலமா' - சீசன் 2 விழிப்புணர்வு கருத்தரங்கம், வருகிற மார்ச், 29 (ஞாயிறு) அன்று சென்னை அம்பத்தூரில் நடைபெற இருக்கிறது.

இந்தக் கருத்தரங்கம் வெறும் அறிவுரை வழங்கும் மேடை மட்டுமல்ல; இது உங்கள் ஆரோக்கியத்திற்கான ஒரு நேரடி வழிகாட்டியாகும்.

5 நிபுணர்கள் - 5 தலைப்புகள்!

நீழிரிவு நோயால் வரும் பாதப் பிரச்னைகள் மற்றும் அதன் நலன்கள் குறித்து ஐந்து வெவ்வேறு கோணங்களில் ஐந்து மருத்துவ நிபுணர்கள் உங்களுடன் உரையாட உள்ளனர்.

நேரடி கேள்வி-பதில்!

டயபெட்டிக் பாதப் பிரச்னைகள் குறித்து உங்கள் மனதில் உள்ள அத்தனை சந்தேகங்களையும் நீங்கள் மருத்துவ நிபுணர்களிடம் நேரடியாகக் கேட்டுத் தெளிவு பெறலாம்.

சிறப்பு விருந்தினர்!

அனைவராலும் விரும்பப்படும் பிரபல பேச்சாளர் பாரதி பாஸ்கர் அவர்கள் கலந்துகொண்டு, ஆரோக்கியம் குறித்து தனது பாணியில் சிறப்பாக உரையாற்றவும் இருக்கிறார்.

கருத்தரங்க நாள்: மார்ச் 29, 2026 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

இடம்: ஸ்ரீ சர்வா மஹால், அம்பத்தூர், சென்னை.

முகவரி: எண்: 57/51, ரெட்ஹில்ஸ் சாலை, புதூர் (புதூர் பேருந்து நிறுத்தம் அருகில்).

அனுமதி முற்றிலும் இலவசம்! ஆனால் குறைவான இடங்களே உள்ளதால் முன்கூட்டியே பதிவு செய்வது அவசியம்.

முன்பதிவு செய்ய க்ளிக் செய்க... https://tinyurl.com/4jcvm4vn

மேலும், விவரங்களுக்கு:

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0