மருத்துவர் டூ ஐஏஎஸ் - கோச்சிங் இல்லாமல் சிவில் சர்வீஸில் முதலிடம்; யார் இந்த அனுஜ் அக்னிஹோத்ரி?

Mar 7, 2026 - 10:32
 0
மருத்துவர் டூ ஐஏஎஸ் - கோச்சிங் இல்லாமல் சிவில் சர்வீஸில் முதலிடம்; யார் இந்த அனுஜ் அக்னிஹோத்ரி?

2025-ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார் அனுஜ் அக்னிஹோத்ரி.

25 வயதான அனுஜ் அக்னிஹோத்ரி, ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் MBBS பட்டம் பெற்றவர்.

எந்தவொரு தனியார் பயிற்சி மையத்திற்கும் செல்லாமல், தனது சொந்த முயற்சியிலேயே இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

அனுஜ் அக்னிஹோத்ரி
அனுஜ் அக்னிஹோத்ரி

ஒரு நாளைக்குச் சுமார் 13 மணி நேரம் வரை விடாமுயற்சியுடன் படித்திருக்கிறார்.

அனுஜின் தந்தை கிருஷ்ண பிஹாரி, ராஜஸ்தான் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வருகிறார்.

தனது வெற்றி குறித்துப் பேசிய அனுஜ் அக்னிஹோத்ரி , "மக்களுக்குச் சேவை செய்யவும், சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வரவும் எனது அம்மாவே எனக்குப் பெரிய உத்வேகமாக இருந்தார்.

ஒரு மருத்துவராக என்னால் செய்ய முடிந்ததை விட, ஒரு அதிகாரியாகப் பெரிய அளவில் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன்" என்றிருக்கிறார்.

அனுஜ் அக்னிஹோத்ரி
அனுஜ் அக்னிஹோத்ரி

அனுஜ் அக்னிஹோத்ரியின் வெற்றி குறித்து பேசிய அவரின் தந்தை, "அனுஜ் எப்போதுமே அர்ப்பணிப்புடன் படிப்பார். அவர் ஒரு சிறந்த ஐஏஎஸ் அதிகாரியாக நாட்டுக்குச் சேவை செய்வார். அவரின் இந்த வெற்றி எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0