திண்டுக்கல்: கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச மெசெஜ்; விடுதி வார்டன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு!

Jun 07, 2026 - 09:01
0
திண்டுக்கல்: கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச மெசெஜ்; விடுதி வார்டன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில், அரசு இட ஒதுக்கீட்டின் (7.5%) கீழ் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு உள்ள விடுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனவும்... தரமற்ற உணவு வழங்குவதாகவும் மாணவிகள் புகார் அளித்துள்ளனர். ஆண்கள் விடுதிக்கு சென்று உணவருந்துங்கள் என கல்லூரி தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். உணவு தயாராகிவிட்டதா? என்பதை தெரிவிக்க வேண்டி அங்குள்ள பெண்களின் தொலைபேசி எண்களை வாங்கிவைத்துள்ளார்,அந்த விடுதியின் வார்டன்.

இதனைப் பயன்படுத்தி, அந்த வார்டன் இரவு நேரங்களில் மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியாக குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். இது குறித்து மாணவிகள் கல்லூரி பொறுப்பு தாளாளர் மற்றும் சில ஆசிரியர்களிடம் சொன்னபோது, அவர்கள் மாணவிகளைச் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதோடு,  ‘அனுசரித்துச் செல்லுங்கள்’ எனக் கூறியதாக, மாணவிகள் குற்றம்சாட்டுகிறார்கள். தொடர்ச்சியாக ​கடந்த 6 மாதங்களாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பதால், பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் மாணவிகள் புகார் அளித்தனர்.

Sexual harassment

இந்த புகாரின் அடிப்படையில் கல்லூரி பொறுப்பு தாளாளர் செல்வகுமார் உட்பட 6 பேர் மீது சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் ரீதியாகப் பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இதனை அடுத்து தற்போது புகார் கொடுத்த மாணவி உட்பட 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து ​தற்போது பயிலும் கல்லூரியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால், தங்களை உடனடியாக வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User