CSK Vs GT: நான்கு வார காத்திருப்பு; 'தோனி விளையாடுவாரா?' - நிலவரம் என்ன?

Apr 26, 2026 - 12:01
 0
CSK Vs GT: நான்கு வார காத்திருப்பு; 'தோனி விளையாடுவாரா?' - நிலவரம் என்ன?

ஐபிஎல் தொடரின் பரபரப்பான கட்டத்தில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்தப் போட்டியில் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் 'தல' தோனி களமிறங்குவாரா என்பதன் மீதே உள்ளது.

சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 103 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற CSK, மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. சஞ்சு சாம்சனின் அதிரடி சதம் மற்றும் பந்துவீச்சாளர்களின் துல்லியமான செயல்பாட்டால் மும்பையை வீழ்த்திய சென்னை அணி, தற்போது புள்ளிப்பட்டியலில் வலுவான நிலையில் உள்ளது.

சிஎஸ்கே வீரர்கள்
சிஎஸ்கே வீரர்கள்

தோனியின் வருகை குறித்துப் பேசிய பயிற்சியாளர் மைக் ஹசி, ``தோனி மிக வேகமாக மீண்டு வருகிறார். வலைப்பயிற்சியில் அவர் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். ஆனால், விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் அவர் 100 சதவீதம் தகுதியை எட்ட வேண்டும் என்று காத்திருக்கிறோம். இன்னும் சில போட்டிகளில் அவர் விளையாடுவார் என நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு வாரங்களாக தசைப்பிடிப்பு காரணமாக ஓய்வில் இருந்த தோனி, தற்போது உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், அவர் அணியில் இணையத் தாமதிப்பதாக தெரிகிறது. தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் சிஎஸ்கே அணியின் 'காம்பினேஷன்' கச்சிதமாகப் பொருந்தி வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளதால், அந்தச் சமநிலையை இப்போதைக்குக் குலைக்க வேண்டாம் என தோனி கருதுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோனியின் வருகை பற்றி அதிகம் வெளிப்படையாகப் பேசாத தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், "அவர் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார்.

CSK Captain Dhoni
CSK Captain Dhoni

அவர் செய்ய வேண்டிய அனைத்தையும் சரியாகச் செய்து வருகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தடுமாறி வரும் நிலையில், சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சென்னை அணிக்குச் கூடுதல் பலமாகும். பிளே-ஆஃப் வாய்ப்பைத் தீர்மானிப்பதில் இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமானது என்பதால், சேப்பாக்கம் மைதானம் இப்போதே திருவிழாக் கோலத்தில் அதகளமாகி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0