CSK: 'Left Arm Taking Over!' - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான்

Sep 21, 2026 - 21:01
0
CSK: 'Left Arm Taking Over!' - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

Zaheer Khan
Zaheer Khan

கடந்த 18 வருடங்களாக சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெம்மிங் அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாகச் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

ஸ்டீபன் பிளெம்மிங் தலைமைப் பயிற்சியாளராக இருந்தபோது, சிஎஸ்கே அணி 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றது.

இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கானை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறது.

ஜாகீர் கானுக்கு இதற்கு முன், ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் ஆலோசகராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளது.

தொடர்ந்து மூன்று சீசன்களாக சிஎஸ்கே பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறிய நிலையில், வரவிருக்கும் 2027 ஐபிஎல் சீசனில் ஜாகீர் கானின் வருகை அணிக்குப் புதிய புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User