கோவை: ஹோட்டல் உரிமையாளர் கொலை; ஆட்டோ ஓட்டுநர் வெறிச்செயல்; அதிர்ச்சி பின்னணி என்ன?

Mar 4, 2026 - 07:31
 0
கோவை: ஹோட்டல் உரிமையாளர் கொலை; ஆட்டோ ஓட்டுநர் வெறிச்செயல்; அதிர்ச்சி பின்னணி என்ன?

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீபன். இவர் கோவை மாவட்டம், சூலூர் அருகே ஹோட்டல் நடத்தி வந்தார். இவரது ஹோட்டலில் அன்பு எஸ்தர் என்பவர் பணியாற்றி வந்தார்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் என்கிற ஆட்டோ ஓட்டுநர் அடிக்கடி அவர்களின் ஹோட்டலுக்குச் சென்று வந்துள்ளார்.

திலீபன்
திலீபன்

பிரேமுக்கு ஏற்கனவே மூன்று திருமணங்களாகியுள்ளன. இந்நிலையில் அவர் எஸ்தரை நான்காவது திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார்.

இதற்கு எஸ்தர் மறுத்துள்ளார். மேலும் அவர் உரிமையாளர் திலீபனுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். ​இதனால் பிரேம் கோபமடைந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் அவர் ஹோட்டலுக்குச் சென்று எஸ்தரையும், திலீபனையும் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சித்தார்.

எஸ்தர்
எஸ்தர்

இதுதொடர்பாக சூலூர் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். 17 நாட்கள் சிறையில் இருந்த பிரேம், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.

நேற்று அதிகாலை 5:30 மணியளவில் எஸ்தர் வீட்டுக்குச் சென்று கதவு தட்டியுள்ளார் பிரேம். கதவு திறக்கப்பட்டபோது அங்கு திலீபன் இருப்பதைப் பார்த்து பிரேம் ஆனந்த் கடும் கோபமடைந்துள்ளார்.

கத்தியால் திலீபனைச் சரமாரியாகக் குத்திக் கொலை செய்தார். மேலும், வீட்டின் சமையல் எரிவாயுவைத் திறந்துவிட்டு தீ வைத்து எரிக்கவும் முயற்சித்தார்.

பிரேம் ஆனந்த்
பிரேம் ஆனந்த்

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பிரேமைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து சூலூர் காவல்துறையினர் பிரேமைக் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0