மகாராஷ்டிராவில் கிணற்றுக்குள் விழுந்த கார்; 7 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி; விபத்து நடந்தது எப்படி?

Apr 4, 2026 - 15:01
 0
மகாராஷ்டிராவில் கிணற்றுக்குள் விழுந்த கார்; 7 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி; விபத்து நடந்தது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகில் உள்ள தீண்டோரி சிவாஜி நகரில் கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி விபத்துள்ளானது.

கார் சாலையோர தடுப்பை மீறி அருகில் இருந்த கிணற்றுக்குள் விழுந்தது. கிணறு முழுக்க தண்ணீர் இருந்தது. இதனால் காருக்குள் இருந்தவர்களால் வெளியில் வர முடியவில்லை. விபத்தைப் பார்த்தவர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

கார் கிணற்றுக்குள் விழுந்தது குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து வந்து தண்ணீருக்குள் கிடந்த காரை கிரேன் மூலம் வெளியில் எடுத்தனர்.

விபத்துள்ளான கார்
விபத்துள்ளான கார்

காரில் இருந்த அனைவரும் மூச்சு விடமுடியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். காரில் அதிக அளவில் மாணவர்கள் இருந்தனர். அவர்கள் தங்களது உறவினர்களுடன் தனியார் கோச்சிங் கிளாஸ் ஒன்றுக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்தக் கோரச் சம்பவம் நடந்தது. விபத்தில் மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

அவர்களில் 7 பேர் மாணவர்கள் ஆவர். இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் ஆழ்ந்த அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இறந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0