BREAKING: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது!
மாவட்ட பெண் ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக வெடித்த விவகாரம், விஜய் தலைமையிலான அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. நீதிமன்றம் வரை சென்ற இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியும் புகாரளித்து, தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்திருந்தார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் அருள் விக்னேஷ் எப்போது வேண்டுமானாலும் கைதுசெய்யப்படலாம் எனப் பேசப்பட்டு வந்தது. இன்று மாலை தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷின் வீட்டுக்கு முன்பு குவிந்திருந்த அக்கட்சித் தொண்டர்களை, காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த நிலையில், எம்.எல்.ஏ அருள் விக்னேஷை சற்று முன்பு காவல்துறையினர் கைதுசெய்திருக்கின்றனர். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட மொத்தம் 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)