கருப்பு: "நான் விமர்சனம் பண்றவங்களுக்கு படம் பண்ணல!" - ஆர்.ஜே. பாலாஜி

May 22, 2026 - 19:01
0
கருப்பு: "நான் விமர்சனம் பண்றவங்களுக்கு படம் பண்ணல!" - ஆர்.ஜே. பாலாஜி

சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், அனகா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

கருப்பு - திரைப்படம்
கருப்பு - திரைப்படம்

படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் பல்வேறு திரையரங்குகளுக்கும் தியேட்டர் விசிட் சென்று வருகிறார் ஆர்.ஜே. பாலாஜி.

அப்படி திருப்பூருக்குச் சென்றவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

செய்தியாளர்களிடையே ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில், "எனக்குச் சாமி பக்தி அதிகம். எல்லாருக்கும், ரெண்டு படம்தான் பண்ணியிருக்கேன். எல்லா படத்திலும் அதே மாதிரி பண்ணல.

ரெண்டு சாமி படம் பண்ணியிருக்கேன். நல்ல படம் பண்ணினால் மனசுல நின்னுடும்னு நினைக்கிறேன். நிறைய மற்ற கதைகளும் இருக்கு. இப்போ சாமி படம் பண்ணதுல எனக்குச் சந்தோஷம்தான்.

கருப்பசாமி நம் ஊருடைய எல்லைச் சாமி. சாதி மதம் எல்லாம் கருப்பசாமிக்குக் கிடையாது. எந்த ஊரா இருந்தாலும், ஊரை விட்டு வெளிய போகும் போதோ, ஊருக்கு வரும் போதோ கருப்பசாமியை வணங்கிட்டுதான் போவாங்க.

ஆர்.ஜே. பாலாஜி
ஆர்.ஜே. பாலாஜி

அப்படி மக்கள் அனைவரும் அவங்களுடைய சாமியாக நினைச்சுப் படத்தை வந்து பார்த்து, கொண்டாடுறது ரொம்ப சந்தோஷமாக இருக்கு." என்றவர், "ஃபேமிலி ஆடியன்ஸுக்காகதான் படம் பண்ணினேன்.

விமர்சனம் பண்றவங்களுக்கு, ஆன்லைன்ல இருக்கிறவங்களுக்காக நான் படம் பண்ணல. நான் படம் ரிலீஸ்க்கு முன்னாடியே இந்த விஷயத்தைச் சொல்லியிருந்தேன். இது மக்களுக்குப் பண்ணின படம்.

அதனால, மக்கள் இந்தப் படத்தைக் கொண்டாடுவாங்கனு எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. சில பேர் படத்தின் தயாரிப்பு நிறுவனமே தியேட்டர்ல சாமி ஆடுறதுக்கு ஆள் அனுப்பிடுவாங்கனு சொன்னாங்க.

எங்களாலேயே இவ்வளவு பட்ஜெட் செலவு பண்ணி ஆள் அனுப்பியிருக்க முடியாது. மக்களே இந்த படத்தை அவங்க படமா நினைச்சுக் கொண்டாடுறதுதான் ரொம்ப ஸ்பெஷலாக மாறியிருக்கு." எனக் கூறியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User