Biggboss Tamil 10: "அந்தக் குணம்தான் என் Positive & Negative!" - நடிகை லட்சுமி பிரியா | Exclusive

Sep 06, 2026 - 18:31
0
Biggboss Tamil 10: "அந்தக் குணம்தான் என் Positive & Negative!" - நடிகை லட்சுமி பிரியா | Exclusive

`மகாநதி' தொடரின் மூலம் பிரபலமானவர் லட்சுமிபிரியா. 'காவேரி' என்கிற இவருடைய கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது.

தற்போது அந்தத் தொடர் முடிவடைந்த நிலையில் அவருடைய ரசிகர்கள் பலரும் அவரை மிஸ் செய்வதாகப் பதிவிட்டு வந்தனர். தற்போது அவருடைய ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார் லட்சுமி பிரியா.

காவேரியாகப் பரிச்சயமானவர் லட்சுமி பிரியாவாக எப்படி இருப்பார் என்பதைப் பார்க்க அவருடைய ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

̀̀̀̀ ̀பிக்பாஸ் தமிழ் சீசன் 10' தற்போது ஆரம்பமாகியுள்ளது. சின்னத்திரை பிரபலங்கள் பலர் வீட்டிற்குள் சென்றிருக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக லட்சுமி பிரியாவிடம் பேசினோம்.

லட்சுமி பிரியா

அவர் பேசியதிலிருந்து, "முதன்முதலாக பிக்பாஸ்ல இருந்து அழைப்பு வந்தப்ப நாம என்னை வளர்ந்துட்டோமா நம்மளலாம் பிக்பாஸ் வீட்டுக்குக் கூப்டுறாங்கன்னுதான் தோணுச்சு. ரொம்ப சந்தோஷமா இருந்தது.

எனக்கு இதுக்கு முன்னாடி இருந்த சீசனுக்கே வரணும்னு இருந்துச்சு. ஆனா அப்ப என்னோட சீரியல் போனதால என்னால வர முடியல. இப்ப சீரியல் முடிச்சிட்டு எப்ப கூப்டுவாங்கன்னு ரொம்ப வெயிட் பண்ணிட்டிருந்தேன். நான் நிறைய விஷயங்கள் எதிர்கொண்டிருக்கேன். எனக்கு இந்த பிளாட்ஃபார்ம் வேணும். 

நான் ரொம்ப ஸ்வீட் ஆன பர்சன். அமைதியான பர்சன்னு நினைக்கிறாங்க. என்னை நோண்டாத வரைக்கும் நான் அப்படித்தான் இருப்பேன். எனக்குள்ளேயும் இன்னொரு பர்சன் இருக்காங்க.

அந்த பர்சனை ஆடியன்ஸூக்குக் காட்டணும்னும் விரும்புறேன். எல்லா நேரமும் ஸ்வீட் ஆக இருக்க முடியாது. என்னை பத்தி எல்லாரும் தெரிஞ்சிக்கணும்னு நினைக்கிறேன். 

லட்சுமி பிரியா
லட்சுமி பிரியா

அமைதியா இருக்கணும்னா நான் வீட்டிலேயே இருந்திருப்பேன்! எங்க அமைதியா இருக்கணும்னு எனக்குத் தெரியும். என் குரலை இனி எல்லா இடத்திலும் நீங்க கேட்பீங்க. என்னைத்தாண்டி எனக்கானவங்கன்னு இருக்கிறவங்களுக்காகவும் நான் நிற்பேன். அந்தக் குணம்தான் என் பாசிட்டிவ் அண்ட் நெகட்டிவ்!" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User