பாரதிராஜா: "'உன்னை பிடிக்கும், உன் நடிப்பு பிடிக்காது'ன்னு சொல்லுவாரு"- அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்

Jun 10, 2026 - 13:02
0
பாரதிராஜா: "'உன்னை பிடிக்கும், உன் நடிப்பு பிடிக்காது'ன்னு சொல்லுவாரு"- அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்

இயக்குநர் பாரதிராஜா அவர்களின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ரஜினிகாந்த், "அவரை வாழ வைத்த திரையுலகத்தை வாழ வைத்தவர் பாரதிராஜா அவர்கள்.

சினிமாத்துறையில் யாருக்கு எந்தப் பிரச்னை வந்தாலும் முதலில் அவர்களுக்காக குரல் கொடுத்து போராடியவர் அவர்.

பாரதிராஜா
பாரதிராஜா

இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் அவரது படைப்புகளை மக்கள் மறக்க மாட்டார்கள்.

அவரின் பெயர் தமிழ் மக்களின் மனதில் என்றென்றைக்கும் இருக்கும். தனிப்பட்ட முறையில் அவர் குழந்தை மாதிரி.

மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேசிவிடுவார். என்னைப் பற்றி நிறைய விமர்சனங்களை வைத்திருக்கிறார்.

'உன்னை எனக்கு பிடிக்கும். ஆனால் உன் நடிப்பு எனக்கு பிடிக்காது' என்று சொல்லுவார்.

அவருடன் இருந்தாலே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். மறைந்த எம்.ஜி.ஆர், கலைஞர், சிவாஜி போன்றவர்களுடன் நட்பாக இருந்தவர்.

அவர் உடல் நலம் சரியில்லாதபோது பார்க்கலாம் என்று இருந்தேன். ஆனால், 'அவர் விரைவில் சரியாகி விடுவார். அப்போது வாருங்கள்' என்றார்கள்.

பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்
பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்

இப்போது அவரைப் பார்க்க முடியாமலேயே போய்விட்டது. என்றென்றும் அவர் என் நினைவிலே இருப்பார்.

அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User