Bhagyaraj: திரைக்கதை மன்னனை ஈர்த்த திரைக்கதையாசிரியர்கள்! - பாக்யராஜ் பகிர்வு

Jun 27, 2026 - 15:02
0
Bhagyaraj: திரைக்கதை மன்னனை ஈர்த்த திரைக்கதையாசிரியர்கள்! - பாக்யராஜ் பகிர்வு

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இன்று மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்குத் தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

திரைக்கதை மன்னன் என அழைக்கப்படுபவர் கே. பாக்யராஜ். பாக்யராஜ் இயக்கிய படங்கள்தான், இன்று சினிமா படிக்கும் மாணவர்களுக்குத் திரைக்கதைக்கான மாஸ்டர் கிளாஸ்!

Bhagyaraj
Bhagyaraj

பாக்யராஜை ஈர்த்த திரைக்கதையாசிரியர்கள் பற்றி 2019-ல் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் பாக்யராஜ் பகிர்ந்திருக்கிறார்.

ஆனந்த விகடனின் 'குரு சிஷ்யன்' தொடருக்காக, இயக்குநர் மற்றும் நடிகர் பாண்டியராஜன், பாக்யராஜைப் பேட்டி கண்டார். அந்தப் பேட்டியில் அவரை ஈர்த்த திரைக்கதையாசிரியர்கள் பற்றி அவர் பகிர்ந்திருக்கிறார்.

அவர், "என்னை ஈர்த்த திரைக்கதையாசிரியர்கள் பல பேர் இருக்காங்க. உதாரணத்துக்கு, மாரி செல்வராஜ்! ‘பரியேறும் பெருமாள்’ படத்துல செத்துப்போயிட்டான்னு நினைச்ச பொண்ணு இன்னும் உயிர்த்துடிப்போடதான் இருக்கான்னு தெரிஞ்சதும், துணியைப் போர்த்திக் கொல்லுற ஒரு காட்சியில மொத்தப் படத்தோட எமோஷனையும் வச்சிருப்பார்.

Bhagyaraj
Bhagyaraj

ஆணவக் கொலையை அதைவிடச் சிறப்பா உணர்த்திட முடியாது. அப்பா-பொண்ணுக்கு நடுவுல இருந்த பாசத்தை மனதைத் தொடுகிற மாதிரி திரைக்கதையில டைரக்டர் சிவா கொடுத்ததுதான் விஸ்வாசம் வெற்றிக்குக் காரணம். ‘தடம்’, ‘இமைக்கா நொடிகள்,’ ‘கோலமாவு கோகிலா’ன்னு ஒவ்வொரு ஜானர்லயும் பல படங்களை அடுக்கிக்கிட்டே போவேன்,” எனப் பகிர்ந்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User