Anbil Avan: "வீட்டை அடமானம் வச்சுதான் இந்தப் படத்தை எடுத்திருக்கேன்" - அசோக் செல்வன்

Sep 22, 2026 - 14:00
0
Anbil Avan: "வீட்டை அடமானம் வச்சுதான் இந்தப் படத்தை எடுத்திருக்கேன்" - அசோக் செல்வன்

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியிருக்கும் 'அன்பில் அவன்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.

'போர் தொழில்' படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜாதான் இப்படத்தின் கதாசிரியர்.

விக்னேஷ் ராஜா, இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திகேயன், அசோக் செல்வன் ஆகிய மூவரும் இணைந்துதான் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள்.

அத்தோடு, ஹேப்பி ஹை பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை அசோக் செல்வனும், அவருடைய சகோதரி அபிராமியும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.

‘அன்பில் அவன்’
‘அன்பில் அவன்’

இந்த நிகழ்வில் அசோக் செல்வன் பேசுகையில், "நான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் வெளியாகி இரண்டு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டன. சினிமாவின் கணக்குப்படி அது 6 வருட இடைவெளியைப் போன்றது.

ஏதோ ஒரு படத்தைச் செய்து, மக்களின் பார்வையில் இருக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. நாம் செய்யும் படங்கள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என நினைத்தேன்.

அதற்குச் சரியான திரைப்படம் இந்த 'அன்பில் அவன்'. நான் எப்போதும் சிரத்தை எடுத்து ஒரு படத்திற்கு வேலை பார்க்க வேண்டும் என நினைப்பேன். கம்ஃபோர்ட்டாக ஏதோ ஒரு இடத்தில் நின்று ஒரு படத்தைச் செய்யக்கூடாது என்றும் நினைப்பேன்.

சில சமயங்களில் பொருளாதார ரீதியான தேவைக்காகவும் அதனைச் செய்திருக்கிறேன். இந்தப் படத்திலிருந்து, என் பெயர் இருந்தாலே, அதில் நான் 100 சதவீதம் உழைப்பைக் கொடுத்திருக்கிறேன் என்று அர்த்தம்.

படத்தின் வெற்றி, தோல்வி என்பதற்குள் பல விஷயங்கள் இருக்கும். எனக்கு இந்தப் படம் ஒரு புதிய தொடக்கம் போல் இருக்கிறது" என்றவர், "இந்தத் தருணத்தில் என்னுடைய அப்பா, அம்மாவுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு கட்டத்திற்கு மேல் படத்தின் ஃபைனான்ஸ் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அப்போது அப்பா, அம்மாவின் வீட்டுப் பத்திரத்தைத்தான் அடமானம் வைத்தேன். எனக்கு உறுதுணையாக இருந்ததற்கு நன்றி.

அசோக் செல்வன்
அசோக் செல்வன்

நான் படத்திற்கு பட்ஜெட் நினைத்ததைவிட அதிகமாகிவிட்டது. அந்த நேரத்தில் படத்திற்குத் தேவையான விஷயங்களைக் குறைத்து கொடுக்க வேண்டும் என்றும் எனக்குத் தோன்றவில்லை.

அந்தச் சூழல் மிகவும் கடினமாகத்தான் இருந்தது. அந்தச் சமயத்தில் வீட்டை அடமானம் வைத்துத் தேவையான பணத்தைப் பெற்றேன். மகனின் கனவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என என் பெற்றோர் இதனைச் செய்திருக்கிறார்கள்.

என் அப்பா, அம்மா போல் இங்கு யாரும் இல்லை. அவர்களுக்கு நன்றி!" எனப் பகிர்ந்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User