'அமைச்சர்களுடன் ஒன்றரை மணி நேர சந்திப்பு; தலைமைச் செயலகம் வந்த அழகிரி மகள்!' - தவெக-வில் இணைகிறாரா?

May 22, 2026 - 14:32
0
'அமைச்சர்களுடன் ஒன்றரை மணி நேர சந்திப்பு; தலைமைச் செயலகம் வந்த அழகிரி மகள்!' - தவெக-வில் இணைகிறாரா?

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் திமுக தலைவர் ஸ்டாலினின் அண்ணனுமான மு.க அழகிரியின் மகள் கயல்விழி, இன்று தலைமைச் செயலகத்துக்கு வந்து தவெகவின் முக்கியமான சில அமைச்சர்களை நேரில் சந்தித்திருக்கிறார்.

கயல்விழி
கயல்விழி

கடந்த மே 10 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். நேரு ஸ்டேடியத்தில் நடந்த அந்த பதவியேற்பு விழாவிலும் அழகிரியின் மகளான கயல்விழி கலந்துகொண்டிருந்தார். புதிதாக அமைந்த அரசு குறித்து பாசிட்டிவாகவும் பேசியிருந்தார்.

இந்நிலையில் கயல்விழி தவெகவில் இணையப்போகிறார் என்றும் மதுரை மேயர் பதவிக்கு குறிவைக்கிறார் எனும் தகவலும் வெளியாகியிருந்தது. இதைத்தொடர்ந்துதான் இன்று காலை திடீரென தலைமைச் செயலகம் வந்திருந்தார் கயல்விழி அழகிரி. அவர் முதல்வரை நேரில் சந்தித்து கட்சியில் இணையும் விருப்பத்தை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. சில மணி நேரங்களுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்தவர், தவெகவின் அமைச்சர்கள் சிலரை மட்டும் சந்தித்து உரையாடிவிட்டு கிளம்பியிருக்கிறார்.

கயல்விழி
கயல்விழி

இதுகுறித்து கயல்விழி அழகிரி பேசுகையில், 'இன்றைக்கு முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர்களை மட்டுமே சந்தித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு' என்று கூறியிருந்தார்.

தவெகவின் முக்கியமான அமைச்சர்கள் சிலரை சந்தித்து தன்னுடைய எதிர்பார்ப்புகளை கயல்விழி அவர்களிடம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User