"மகாநதி சீரியலுக்குப் பிறகு என்னை எல்லோரும் 'பங்கஜம் மாமி'னுதான் கூப்பிடுறாங்க!" - கவிதா ஷேரிங்ஸ்

May 03, 2026 - 12:49
0
"மகாநதி சீரியலுக்குப் பிறகு என்னை எல்லோரும் 'பங்கஜம் மாமி'னுதான் கூப்பிடுறாங்க!" - கவிதா ஷேரிங்ஸ்

20 வருடத்திற்கும் மேலாக, பல்வேறு கதாபாத்திரங்களில் சீரியல்களில் நடித்து வருகிறார் நடிகை கவிதா. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'அயலி' சீரியலில் நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'மகாநதி' சீரியலில் இவர் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரின் சீரியல் பயணம் மற்றும் அவரது அனுபவங்களைப் பற்றி அவருடன் பேசினோம்.

கவிதா
கவிதா

"பல பேர் என்னைச் சின்ன வயசுல இருந்து சீரியல்ல பார்த்துட்டு இருக்கிறதா சொல்லுவாங்க. அவங்ககிட்ட நான், 'சின்ன வயசுல இருந்தே நடிச்சிட்டு இருக்கேன்; எனக்கும் உங்க வயசுதான் ஆகுது'ன்னு சிரிச்சுக்கிட்டே பதில் சொல்லுவேன்.

எனக்கு அடுத்தடுத்து சீரியல்கள்ல வாய்ப்பு கிடைக்கிறதுக்கு கடவுள்தான் காரணம்னு சொல்லுவேன். ஒரு சீரியல் முடியிற சமயத்துல இன்னொரு சீரியலுக்கான வாய்ப்பு கிடைச்சுடும்.

நான் நெகட்டிவ் ரோல் சமீபத்துலதான் நடிக்கத் தொடங்கிருக்கேன். அதோட தொடர்ச்சிதான் 'அயலி'. எனக்கு நெகட்டிவ் ரோல் பண்ண ரொம்பப் பிடிச்சிருக்கு. இவ்வளவு வருட சீரியல் பயணத்துல நான் நிறைய பாசிட்டிவ் ரோல்தான் பண்ணியிருக்கேன். என் கரியர் தொடக்கத்துல நான் பண்ண நெகட்டிவ் ரோல்ஸைக் கைவிட்டு எண்ணிடலாம்.

விஜய் டிவி 'அவளும் நானும்', கலர்ஸ் டிவில 'வேலுநாச்சி' சீரியல்னு ரொம்பக் கம்மியான நெகட்டிவ் ரோல்ஸ்தான் பண்ணியிருக்கேன். அதிகமான பாசிட்டிவ் ரோல்ஸ் பண்ணினதுனால எனக்கு அதுலிருந்த சுவாரஸ்யம் போயிடுச்சு.

நான் சீரியல்ல நடிக்கத் தொடங்கின போது எனக்கு நிறைய நெகட்டிவ் ரோல்ஸ் வந்தது. ஆனா அப்போதெல்லாம் 'நோ, நோ' சொல்லிட்டேன். ஆனா இப்போ, நெகட்டிவ் ரோல் பண்றதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

என் கூட இருந்த நிறைய பேரு என் ஃபேஸ்க்கு நெகட்டிவ் ரோல் செட் ஆகாதுன்னு சொல்லியிருக்காங்க. நெகட்டிவ் ரோல் செய்யத் தொடங்கின அப்போ ஆடியன்ஸ் என்னைப் பார்த்தா 'நீங்க ஏன் நெகட்டிவ்ல பண்றீங்க, பண்ண வேண்டாம்'னுலாம் சொல்லியிருக்காங்க.

ஆனா, 'அயலி' சீரியல்ல என்னை செல்வநாயகியா மக்கள் ஏத்துக்கிட்டாங்க" எனத் தொடர்ந்து பேசியவர், "ரீப்ளேஸ்மென்ட் கேரக்டர்ல நடிக்கிறதுல எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

இந்தக் கேரக்டர் நான்தான் பண்ணணும்னு இருக்குன்னு நினைச்சுக் கான்ஃபிடென்ட்டா பண்ணுவேன். 'வினோதினி' சீரியல்ல என்னோட ரோல் பயங்கரமான நெகட்டிவ். பிறகு 'மகாநதி' சீரியல்ல ஒரு கேமியோ பண்ணியிருந்தேன்.

அந்தச் சீரியல்ல நான் நடிக்க ஒத்துக்கிட்டதுக்குக் காரணமும் இருக்கு. அதுல 'மாமி' ரோலுன்னு சொன்னாங்க. எனக்கு அந்த ஸ்லாங் பேசி நடிக்கணும்னு ஆசை இருந்தது.

அந்தச் சீரியல் டீமை எனக்கு ஏற்கெனவே தெரியும். அதான் கேமியோவா இருந்தாலும் நடிக்க ஒப்புக்கிட்டேன். ஆனா அதுக்கு இவ்வளவு வரவேற்புக் கிடைக்கும்னு நான் நினைக்கல.

எவ்வளவு சீரியல் பண்ணியிருந்தாலும் அந்தச் சீரியலோட 'பங்கஜம் மாமி' கேரக்டர் எனக்கு நல்ல ரீச் கொடுத்தது. அந்தச் சீரியல் பண்ண அப்புறம் என்னை எல்லாரும் பங்கஜம் மாமி என்று கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க" என்றார்.

மேலும் பேசியவர், "சிறந்த வில்லின்னு தமிழக அரசின் மாநில விருது கிடைச்சது. எனக்கு விருது கொடுக்கிறாங்கன்னு என்னால நம்பவே முடியல. சேனல்ல இருந்து அவார்டு கொடுக்கிற அப்பல்லாம் நாமினேட் ஆகியிருக்கேன்.

ஆனா விருது கிடைத்ததில்லைன்ற ஆதங்கம் இருந்தது. எனக்கு ஸ்டேட் அவார்ட் கிடைச்சது ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. அளவே இல்லாத ஆனந்தமா இருந்தது. என்னுடைய கரியரின் தொடக்கத்துல சில படங்கள்ல சின்னச் சின்ன ரோல்ஸ் பண்ணியிருக்கேன்.

ஆனா, அதுல நான் எதிர்பார்த்த திருப்தி எனக்குக் கிடைக்கல. அப்போதான் எனக்கு, எஸ்.பி. முத்துராமன் சார் இயக்கத்துல வந்த 'நிம்மதி உங்கள் சாய்ஸ்' சீரியல் வாய்ப்பு கிடைத்தது.

அந்தச் சீரியல் நான் பண்ணும் போது நான் ஹீரோயின் ரோல் பண்ணது எனக்கு மனநிறைவா இருந்தது. அப்புறம் தொடர்ச்சியா சீரியல் வாய்ப்புகள் கிடைச்சதால படம் பண்றதை நிறுத்திட்டேன்" எனப் பகிர்ந்து கொண்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User