கட்சி அலுவலகத்தில் பெண் MLA-வை கட்டியணைக்க முயன்ற கேரள காங்கிரஸ் நிர்வாகி; அநாகரிக செயலால் சர்ச்சை!

May 07, 2026 - 22:00
0
கட்சி அலுவலகத்தில் பெண் MLA-வை கட்டியணைக்க முயன்ற கேரள காங்கிரஸ் நிர்வாகி; அநாகரிக செயலால் சர்ச்சை!

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி (KPCC) அலுவலகத்தில் நடந்த சங்கடமான நிகழ்வு, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சமீபத்தில் கேரள மாநில சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வென்ற கம்யூனிஸ்ட் கட்சி, இந்த முறை காங்கிரஸிடம் தோல்வியை தழுவியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் உள்ள KPCC தலைமையகத்தில் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கேரள காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வருகை தந்திருந்தனர். வரும் நிர்வாகிகளை காங்கிரஸின் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செரியன் பிலிப் வரவேற்றார்.

அப்போது பெண் சட்டமன்ற உறுப்பினர் பிந்து கிருஷ்ணா வருகை தந்தபோது, அவரை வலுக்கட்டாயமாகத் தழுவ முயன்றார். அவர் கைகளால் தடுத்தும் மீண்டும் மீண்டும் முயன்ற காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியிருக்கிறது. கட்சியின் பிறத் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் முன்னிலையில் பதிவான இந்தச் சம்பவம், அரசியல் களங்களில் தனிப்பட்ட எல்லைகள், பொது நாகரிகம் மற்றும் மரியாதை ஆகியவை குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.

பெண் தலைவர்கள் தங்களின் பணிகளைச் செய்ய வரும் அலுவலகங்கள், அவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் இடங்களாக மாறக் கூடாது எனப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏற்கனவே அரசியல் பரபரப்புகளால் சோர்வடைந்திருக்கும் மக்களுக்கு, இந்தச் சம்பவம் 'அரசியல் மேடை நாகரிகம்' குறித்த புதிய விவாதத்தை தொடங்கியிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User