5 சுற்று துப்பாக்கிச்சூடு; சில நொடிகள் இயங்க மறுத்த துப்பாக்கி; நூலிழையில் உயிர் தப்பிய டைகர் ஷெராப்

Oct 19, 2026 - 15:01
0
5 சுற்று துப்பாக்கிச்சூடு; சில நொடிகள் இயங்க மறுத்த துப்பாக்கி; நூலிழையில் உயிர் தப்பிய டைகர் ஷெராப்

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் நேற்று மாலை மும்பை அந்தேரி ஜுகுவில் உள்ள கால்பந்து மைதானத்தில் இருந்து காரில் புறப்பட்ட போது இரண்டு பேர் அவரை நோக்கி சுட்டனர். மொத்தம் 5 ரவுண்ட் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இதில் நடிகரின் கார் ஓட்டுநர் மற்றும் அவருடன் இருந்த ஒருவர் என இரண்டு பேர் காயம் அடைந்தனர். டைகர் ஷெராப் காயம் அடைந்தாரா என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் அவர் தப்பித்துவிட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இத்துப்பாக்கிச்சூட்டுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் பொறுப்பு ஏற்றுள்ளனர். அவர்கள் இது தொடர்பாக காணொலி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது இரண்டு பேரில் ஒருவரது துப்பாக்கி சுடப்பட்டபோது அது சரியாக வேலை செய்யாமல் போய்விட்டது. அந்த நபர் டைகர் ஷெராப் அருகில் நின்று கொண்டிருந்தார். அது சுட்டு இருந்தால் விபரீதமாக மாறி இருக்கும்.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நடிகர் டைகர் ஷெராப்பை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தொடர்பாக புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில் டைகர் ஷெராப் நெஞ்சு மற்றும் கையில் கட்டுப்போட்டு இருந்தார்.

அவருக்கும் இத்துப்பாக்கிச்சூட்டில் லேசான காயம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது டைகர் ஷெராப்பின் தாயார் ஆயிஷாவும் உடனிருந்தார். இந்த சந்திப்புக்கு பிறகு ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில்,'' மக்களை அச்சுறுத்தும் முயற்சிகள் ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது.

இத்தகைய குண்டர் கலாச்சாரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கும். மும்பையில் யாருடைய அராஜகமும் எடுபடாது. மிரட்டல்கள் அல்லது வன்முறை மூலம் எவரும் மும்பையில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது ஒரு தீவிரமான சம்பவம். ஐந்து சுற்றுகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் பாதுகாப்பாக இருக்கிறார். அவரது ஓட்டுநர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் கண்டிக்கத்தக்கது. துப்பாக்கிச் சூட்டின் போது, ​​வெடிமருந்து மற்றும் உடைந்த கண்ணாடித்துண்டுகளால் டைகர் ஷெராபின் கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவரும் அவரது தாயாரும் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

மக்களை அச்சுறுத்தும் இத்தகைய முயற்சிகள் அனுமதிக்கப்பட மாட்டாது. இந்த ரவுடித்தனத்திற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம். மும்பையில் யாருடைய அடாவடித்தனமும் எடுபடாது" என்று அவர் கூறினார்.

காவல்துறை துணை ஆணையர் மோகித் கார்க் இது குறித்து அளித்த பேட்டியில்,'' ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 7:00 மணியளவில் மும்பையில் உள்ள ஒரு கால்பந்து கிளப்பிலிருந்து டைகர் ஷெராப் வெளியேறியபோது, ​​அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத்துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது''என்றார். போலீஸார் இரண்டு பேரை பிடித்து சென்று விசாரித்து வருகின்றனர்.


10 தனிப்படைகள் அமைப்பு

துப்பாக்கிச்சூடில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடிக்க மும்பை போலீஸார் 10 தனிப்படைகளை அமைத்து இருக்கின்றனர். குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் கடந்த சில நாட்களாகவே லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் டைகர் ஷெராப்பை கண்காணித்து வந்தது தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடந்தவுடன் டைகர் ஷெராப் உடனே ஓட்டுநர் இருக்கைக்கு சென்று தனது காரை காரில் இருந்தவர்களை வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். கார் முழுக்க ரத்தம் சிதறி இருந்தது. கார் கண்ணாடி உடைந்ததில் டைகர் ஷெராப்பும் காயம் அடைந்து இருந்தார்.

ரயிலில் தப்பிச்சென்ற குற்றவாளிகள்

இச்சம்பவத்தையடுத்து குற்றவாளிகளை உடனே கண்டுபிடிக்குமாறு போலீஸாருக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், கொலை முயற்சிக்குப் பிறகு குற்றவாளிகள் அந்தேரி ரயில் நிலையத்திற்குச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ஜூஹுவிலிருந்து அந்தேரிக்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அந்த வாகனம் மும்பையைச் சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது. இந்த இருசக்கர வாகனம் டி.என். நகர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User