துப்பாக்கிச் சூட்டால் உயிருக்குப் போராடும் 4 வயது குழந்தை; காஃபி தோட்ட உரிமையாளரின் கொடூரச் செயல்

Jul 26, 2026 - 08:32
0
துப்பாக்கிச் சூட்டால் உயிருக்குப் போராடும் 4 வயது குழந்தை; காஃபி  தோட்ட உரிமையாளரின் கொடூரச் செயல்

கூலி சம்பந்தமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் காஃபி தோட்ட உரிமையாளர் தொழிலாளர்களை நோக்கிச் சுட்டதில், 4 வயது குழந்தையின் தலையில் குண்டு பாய்ந்த சம்பவம் சிக்கமகளூரு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஃபி தோட்டம்
காஃபி தோட்டம்

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பாலேஹள்ளி கிராமத்தில் காஃபி தோட்டம் வைத்திருப்பவர் ஜெகதீஷ கவுடா.

இவரது தோட்டத்தில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 24 ஆம் தேதி வேலைக்குச் செல்லும் முன் தினக்கூலியாக ரூ. 400 வழங்க வேண்டும் என்று ஜெகதீஷ கவுடாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது ஒவ்வொரு தொழிலாளருக்கும் தினக்கூலியாக ரூ. 350 தருவதாகவும் ரூ. 50 ஐ பின்னர் தருவதாக ஜெகதீஷ கவுடா கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு சம்மதிக்காத தொழிலாளர்கள், முழுக்கூலியையும் உடனடியாக வழங்கினால்தான் வேலைக்குச் செல்வோம் என்று வலியுறுத்தியுள்ளனர். இது ஜெகதீஷ கவுடாவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்களைத் திட்டியுள்ளார்.

துப்பாக்கி
துப்பாக்கி

இதனால் அருகிலுள்ள தோட்டங்களில் பணியாற்றிய அசாம் மாநிலத் தொழிலாளர்களையும் அழைத்துவந்து, ஜெகதீஷ் கவுடாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், தொழிலாளர்களை மிரட்டுவதற்காக ஜெகதீஷ் கவுடா தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டுள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த தொழிலாளரின் 4 வயது குழந்தையின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது.

உடனே காயமடைந்த குழந்தையை அங்குள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மங்களூருவிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

தற்போது தீவிர சிகிச்சையில் குழந்தை உள்ள நிலையில் மூடிகெரே போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான காஃபி தோட்ட உரிமைஉரிமையாளர் ஜெகதீஷ கவுடாவைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் சிக்கமகளூரு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User