வாழ்வின் அர்த்தம் என்ன? கண்ணதாசன் முதல் காம்யூ வரை மனித மனதைத் தேடும் தத்துவப் பயணம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
என் எழுதுகோல் என் மூளை ! என் சிந்தனைகளைத் தூண்டும் மனதின் எண்ணங்களே செயல்களாக காண்கிறேன் .
அவைகளை பதிகிறேன் என் தாள்களில்...
என்னுடன் நம்பிக்'கை'யுடம் கைகுலுக்க வாருங்கள் ! நண்பர்களே!! தோழர்களே!!!
மனதார மனம் விட்டு பேசலாம் வாங்க. மனதின் பயணங்களில் உங்களுடன்..
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" - கண்ணதாசன் எழுதி வைத்தார் ;பாடினார்கள் ;பாடக் கேட்டோம்; நம்பினோம்; நாளும் நம்புகிறோம்.
இங்கே மனைவியை என்பதை குடும்பத்தின் மையமாக வைத்து அவர் பாடியிருக்கிறார்.
மனைவி என்பவள் குடும்ப விளக்கு.
அவளின்றி அங்கேயே அன்பு இல்லை; பண்பு இல்லை ; நட்பு இல்லை; ஏன் அமைதியே இல்லை.
குடும்பத் தலைவன் இறந்து விட்டால் அவள் விதவை ஆகிறாள்; ஆனால் குடும்பத் தலைவி இறந்துவிட்டால் உன் அனாதை ஆகிறான்.
நான் கண்ணதாசனிடம் இவ்வாறு முறையிடுவேன்...
'என் ஆசானே ! உன்னிடம் ஒரு உண்மை சொல்கிறேன் கேளுங்கள்!!'
மனிதன் என்பவன் ஒரு வித்தியாசமான பிறவி; ஒரு விசித்திரம்; அவனுக்கே அவனைப் பற்றி தெரியாது ?
'என் வியப்பை அடி நாதத்திலிருந்து அர்த்தங்கள் ஆகி உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்'....
நீங்கள் எப்போதுமே நான் சொல்கிற இரண்டு விஷயங்களை கவனித்திருப்பீர்கள்...
இல்லையென்றால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, பதினெண் மேல் கணக்கு, குறுந்தொகை, நற்றிணை ,பெருந்தொகை, அகநானூறு, புறநானூறு, ராமாயணம், திருக்குறள் என எடுத்து சந்தமிட்டு எங்களுக்கு கொடுத்திருக்க மாட்டீர்கள்..

என் கேள்விக்கு உங்களுடைய ஆன்மா பதில் அளிக்கட்டும்...
என் இரண்டு விடயங்கள் இவைதான்
1.நாம் எப்படி உணர்கிறோம் ?
2.நம் உணர்வுகள் படி நம் நடத்தைகள் நடக்கின்றனவா?
இதில் உள்ள பொய்மைகள்..
1.ஒரு மனிதன் பயத்தை உணரலாம்; ஆனால் அவனும் அதனை கோபமாக காட்டிக் கொள்ள விரும்புகிறான்.
2.ஒரு மனிதன் பாதுகாப்பு இல்லாமல் உணரலாம்: ஆனால் அவனும் தன்னை ஒரு தன்னம்பிக்கை உடையவனாக காட்டிக் கொள்ள விரும்புகிறான்.
3.ஒரு மனிதன் தனிமையை உணரலாம்;ஆனால் அவனும் தன் செயலால் வித்தியாசமாக காட்டிக்கொள்ள விரும்புகிறான்.
இவைகள் தான் மனிதனின் மனதின் வேறுபாடுகள்.
ஆனால் இன்று ஒரு முக்கியமான சங்கதியை உங்களுடன் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
அவன் தன் உணர்வுகளில், எண்ணங்களில் ,நடத்தைகளில், நம்பிக்கைகளில் "முழுமை" பெற்றதாக புரிதலுடன் இருப்பதாக "நடிக்கிறான்".
இதற்கான காரணங்கள் என்று நம்மிடையே உலாவிக் கொண்டிருக்கும் மித மிஞ்சிய சமூக ஊடகங்களின் "பொருள் அடக்கம்".
இந்த பொருள் அடக்கமானது தன்னை அறிதல் என்கிற ஆன்மீக தளத்திலும் விழிப்புணர்வு என்கிற விஞ்ஞான தளத்திலும் அவரவர்கள் அவர்களுக்கு புரிந்த சொல்லாந்திகளை பயன்படுத்தி ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள்.
உண்மையிலேயே இது நம்முடைய எண்ணங்களை(thoughts )உணர்வுகளை (feelings) நடத்துகின்றன என்பதை பற்றிய ஒரு புரிதல் ;வாருங்கள் பார்க்கலாம்.
நான் கீழே விழுமியங்கள் சார்ந்த காரணிகளை புறம் தள்ளாமல் கொஞ்சம் என்னோடு காது கொடுத்து கேளுங்கள்.
இல்லையெனில் ,உங்கள் மனது ஒரு ஆபத்தான விளைவுகளை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதன் வினைவுகளை நீங்கள் அறுக்கத்தான் வேண்டும்.
எப்போது நீங்கள் உங்கள் உணர்வுகளையும், எண்ணங்களையும் "மறு ஆய்வு" செய்ய தயங்கிறீர்களோ அப்போதே நீங்கள் உங்கள் உணர்வுகளுக்கும் ,எண்ணங்களுக்கும் அடிமையாகி விட்டீர்கள்.
உதாரணத்திற்கு உங்களுக்குள் புதைந்திருக்கும் உணர்வுகளை நீங்கள் அடக்கும்போது அது வேறு வழியில் வெடித்து உங்களை சின்னா பின்னம் ஆக்கிவிடும்.
ஆகையால் நண்பர்களே இந்த போக்கு உங்களை உங்கள் உறவுகளிடம் இருந்து பிரித்து விடும்.நீங்கள் பெரிய பாதிப்பிற்கு உள்ளாவீர்கள்.
ஆகவே இந்த உண்மைகளை நீங்கள் கண்டு அறியாவிட்டால் உங்களை பாதிக்கும் எல்லாம் எதிர்மறை நிகழ்வுகளும் உங்களுள் அதி தீவிரமடைந்து உங்கள் நம்பிக்கையில் ஒரு பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி படு பாதாளத்திற்கு தள்ளிவிடும்.
"ஆகவே உங்களை நீங்கள் தெரிந்து கொள்ள முயலுங்கள்"...
இது ஒரு வாழ்நாள் அனுபவம்...
காரணம்,உங்கள் அனுபவங்கள், ஆசைகள், பயங்கள் ,செயல்கள், எல்லாம் உங்களுக்கு மட்டுமே தெரிந்த மர்மங்கள்.
இந்த மர்மங்களை கொண்டு உங்களுள் பொதிந்திருக்கும் உண்மைகளை கண்டு எடுத்து அதன் முழுமையை அறிய முயற்சி செய்யுங்கள்.

மனிதன் ஒரு விசித்திரம்.
கண்ணதாசன் காலத்தை கடந்தவன்.
அவனுடைய வரிகளை நாம் படித்துவிட்டு மட்டும் போக முடியாது.
அதன் உண்மைகள் தொன்மைகள் பல யுகங்களுக்கு நம்மை வழிநடத்தும்.
நான் இப்படியாக கண்ணதாசனை அவன் பாடல் வரியிலிருந்து ஏற்றுக்கொள்கிறேன்
மனைவியைப் பற்றி அவன் சொல்கிற போது அவன் வாழ்ந்த சமூக சூழ்நிலை,அறம் சார்ந்த நிலைப்பாடு ஆகியவை காரணிகளாக அமைந்தன
இப்போது உள்ள விழுமியங்களை வைத்து நாம் ஆராயும் போது ,நம்மிடையே live in relationship வந்துவிட்டது.
இருந்தாலும் அவன் சொன்னது ஒரு பக்தி மார்க்கத்தில் இருந்து சொல்லி இருக்கலாம்.
ஒரு தத்துவ ரீதியாக பார்க்கும் போது நாம் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதில் தான் நம்முடைய வாழ்க்கையில் இருக்கிறது.
அவன் பெண்மையை மட்டும் போற்றவில்லை ;வருங்கால சந்ததியின் நலம் கருதி ஒரு அறச் சீற்றத்துடன் எழுதி இருப்பான் என்று நினைக்கிறேன்.
ஆகவே இப்போதெல்லாம் "வாழ்க்கை" என்பது ஒரு "வரம்" என்று சொல்லத் தோன்றுகிறது.
அந்த வாழ்க்கை இருவருக்குமே அமைய பெரும்பாடு பட வேண்டி இருக்கிறது.
இப்படியாக கோவிந்தசாமி ஒரு ஒலிப் பெருக்கியில் கேட்ட அந்த பாட்டு ( கண்ணதாசனின் கை வண்ணம்)மேலே கண்டவாறு சிந்திக்க வைத்திருக்கிறது.
டாக்டர் கோவிந்தசாமி, தத்துவ இயலில் 36 ஆண்டுகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
அவ்வாறாக அவர் காலையில் நடை பயணம் சென்றபோது தன் மாணவன் ஒருவனை சந்திக்க நேர்ந்தது.
அவன் பெயர் பாலுசாமி.
பாலுசாமியின் இப்போது ஒரு தத்துவ பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
ஐயா! வணக்கம்!!
பாலு எப்படி இருக்க?
நல்லா இருக்கேன் சார்!!
இன்று என்னுடைய மாணவன் ஒரு கேள்வி கேட்டான் சார் .அது உங்க கிட்ட சொல்றேன் .ரொம்ப interesting ஆக இருக்கு.
Cogito ,ergo sum என்கிற பிரெஞ்சு வார்த்தையை பயன்படுத்தி rene Decartes சொன்ன" I think therefore I am"
என்று என்னையே உதாரணமாக சொல்லி நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால் நான் முதலில் சிந்திக்கிறேன் என்று சொன்னேன்.
அவன் உடனே சார் நீங்க உயிரோட இருப்பதால்தான் சிந்திக்கிறீர்கள் என்றான்.
இந்த வாக்கியத்தை பிடித்துக் கொண்டு சபாஷ் அதைத்தான் rene Decartes இவ்வாறாக மாற்றி உலகத்தில் இறுதியில் இருக்கு ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினார்
அந்த வாக்கியம் தான்..
"I think ,therefore I am"
இப்படியாக தத்துவம் ரீதியான எங்களுடைய வகுப்பு சென்று கொண்டிருக்கிறது.
அந்த நேரத்தில் உங்களை நான் நினைத்துக் கொண்டேன் என்றான் பாலுசாமி.
நன்றி தெரிவித்து நகர்ந்தார் கோவிந்தசாமி.

அவருக்கு ஒரு புரிதல் உண்டாக்கியது.
'நாம் நடக்கிறோம் என்கிற ஒரு எண்ணத்தில் நடக்காமல் எது நம்மை நடத்துகிறது என்று' ?
'அவரே அவர் பாராட்டிக் கொண்டார்'.
"அதுதான் தத்துவத்திற்கு கிடைக்க வெற்றி என்று"
காந்தியடிகள் அவருக்கு நினைவுக்கு வந்தார்கள்.காந்தியடிகள் நடக்க சொன்னார். நடப்பதால்தான் நாம் சிந்திக்கிறோம் என்று.
பிறகு தான் தெரிந்தது நம்முடைய இரண்டாவது இதயம் என்பது நம் கால்களில் தான் இருக்கிறது.
அது நம் ரத்தம் ஓட்டத்தை ஒரு எதிர்நீச்சல் போட்டு நம்மை தினமும் காத்துக் கொண்டிருக்கிறது.
அதற்காகவே நடக்க வேண்டும்.
திடீரென்று அவருக்கு ஒரு தத்துவம் மேலோங்கி வந்தது.
Existence preceds Essence.
நாம் இருப்பதின் தேவையை உணர்ந்ததால் தான் நமக்கான வாய்ப்புகளை நாம் தேடிக் கொள்கிறோம்.
அதுவே வளர்ச்சிக்கு உந்து சக்தியாக மாறுகிறது.
Paul sartre என்கிற இருத்தல் இயல் முன்னோடிக்கு நன்றி தெரிவித்து தன் எண்ணங்களுடன் வீடு சேர்ந்தார் கோவிந்தசாமி.
அவருடைய சிந்தனை பல மடங்கு ஓட்டம் எடுத்தது.
வாழ்விற்கான காரணமும் தெரியவில்லை; காரியமும் புலப்படவில்லை.
அப்படி என்றால் வாழ்க்கைக்கான அர்த்தம் தான் என்ன ? என்று அவருடைய மனது வினவியது.
அந்த ஓட்டத்தில் Albert Camus வந்தார்.
துன்பங்கள் தான் ஒரு மனிதனை சிந்திக்க வைக்கிறது. செயலுக்கு ஊக்கத்தையும் கொடுக்கிறது.
வாழ்க்கையில் பெரிதான அர்த்தங்களை எல்லாம் கண்டுபிடித்து வாழ்வது என்பது அபத்தம்.
மனிதன் பிறக்கும்போதே இருக்கிறான்.அப்போதே அவன் தன் இருத்தலை அழுதல் மூலம் நிறைவேற்றிக் கொள்கிறான்.
அவன் யோசிக்க யோசிக்க அவன் மேலும் வாழ்க்கையின் அர்த்தங்களை தேடி அலையும் போது அதில் அவனுக்கு கிடைப்பது ஏமாற்றமே.
ஆகவே தான் நான் சொல்கிறேன்-Albert Camus ...
"ஒருவன் வாழும்போது இரண்டு வழிகளை தேர்ந்தெடுக்கிறான் ஒன்று தற்கொலை (suicide)மற்றொன்று மனரீதியான மரணம்(psychological death).
முதல் வழியை தேர்ந்தெடுத்தவர்கள் வேறு வழி தெரியாதவர்கள்.
இரண்டாவது வழியை தேர்ந்தெடுத்தவர்கள் இருக்கும்போது இறந்து கொண்டிருப்பவர்கள்.
ஆகவே தான் சொல்கிறேன் இருக்கும்போதே "முரண்படு"
இந்த முரண் படுதல் ஒவ்வொருக்கும் உள்ளேயும் , வெளியேயும் நடைபெற வேண்டும்.
உள்ளே நடைபெறும் போது "இரக்கம் உண்டாகும் "
அது வெளியே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் வேலையை செய்து விட்டு போகும்.
இதற்கு அவர் பெயர் இட்டது - leaping into action.
பிறகு பெரிய விவாதம் எடுத்து philosophy in action என்கிற பொருள் படி செய்முறை சாத்தியங்களை உருவாக்கியது.
அப்போது தான் போர் இல்லாத , அமைதியான சமூக சூழல் உருவாகும் என்று நம்பினார்.

இந்த சிந்தனை கோவிந்தராஜனார் ஆழ்ந்த நித்திரையில் சென்றார்.
அவருடைய கனவுகளில் பல எண்ணங்கள் தோன்றின..
1. மன்னிப்பது
2. மன்னிக்க வேண்டுவது
3. மனதில் மலர்ச்சி அடைவது
4.அன்பை முதலில் கொடுப்பது
5.அவமானத்தை தள்ளிப் போடுவது
6.எல்லாவற்றையும் மறப்பது.
பிரிவு கூட பாவம் இல்லை. எதுவும் நம்மோடு வருவது இல்லை.
பழகுவோம் ; பழக்கப் படுவோம் .
இந்த உலகத்தில் தர்மம், அதர்மம் ;நல்லது, கெட்டது ;இருப்பது ,இல்லாதது எல்லாமே மனிதனுடைய மனதினுடைய ஓட்டங்கள்.
அந்த ஓட்டங்களை நாம் தடை செய்யக்கூடாது; மாறாக மடை மாற்ற வேண்டும்.
படித்தல்,இசை கேட்டல்,பிறருக்கு உதவுதல்,மௌனம் ஆகியவை நம்முடைய சிந்தனைக்கு செமுமை சேர்க்கும்.
பேசுவதை விட கேட்பது மிகவும் சிறந்தது.
இதன் மூலம் நம்முடைய மதிப்பு அதிகமாகும்.
நம்முடைய பொறுமை வளரும்.
நம்முடைய பொறாமை அழியும்.
நம் வாழ்வும் வளமும் தமிழே என்று தமிழைப் போற்றி தமிழை வணங்குவோம்.
சாதி சமயமற்ற மொழி பேதமற்ற பேரன்பு கொண்ட தமிழ் சமூகம் தான் உலகத்திற்கு "யாதும் ஊரே !யாவரும் கேளீர்!!" என்கிற உணர்வை உரக்க சொன்னது.
தமிழினுடைய D N A - பேரன்பு என்று பெயர்.
மனிதர்களைப் பற்றி கூறும் போது ஒரு disclaimer தேவைப்படுகிறது.
அதை Yuval Nova Harari உன்ன வாக்கியத்தின் மூலம் என் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
The word of thoughts ,feelings ,belief is by definition for far more difficult to discipher.
-செல்வராஜ் ராமன்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!
இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)