``ரத்தப் பரிசோதனைக்கு நான் தயார்!" - பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதைப்பொருள் ரெய்டு
பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ன் ரன்னர் அப் பாலாஜி முருகதாஸ். இவரது வீட்டில் நேற்று (நவம்பர் 8) இரவு போதைப் பொருள் சம்பந்தமான ரெய்டு நடந்துள்ளது.
தன்னுடைய வீட்டில் நேற்று இரவு போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 15 காவலர்கள் ரெய்டு செய்தனர் என்று தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பாலாஜி முருகதாஸ்...
“நான் தெரிந்துகொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றுதான்... என் மீது யார் புகார் அளித்தது விஜய்? யார் புகார் அளித்தார், எதற்காக அளித்தார் என்று எனக்குத் தெரிய வேண்டும்!

நான் எத்தனையோ முறை கேட்டும் காவல்துறை பதிலளிக்கவில்லை.
ரத்தப் பரிசோதனை செய்துகொள்ளக்கூட நான் தயார். 15 காவலர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். இறுதியில் அவர்கள் கண்டுபிடித்தது 3 பூனைகளையும் ஒரு நாயையும் மட்டும்தான்!
ஆனால் எந்த அடிப்படையில் அவர்கள் வந்தார்கள் என்பதை நான் அறிய விரும்புகிறேன்!
என்னிடம் எந்தத் தவறும் இல்லை என்பதால், சர்ச் வாரண்ட் எதுவும் இல்லாமலேயே அவர்களை நான் வீட்டிற்குள் அனுமதித்தேன்.
ஆனால் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு கண்டிப்பாக எனக்கு விளக்கம் தேவை” என்று பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)