மோடி வெற்றி; ட்ரம்ப் தோல்வி: இந்திய ஜனநாயகம், அமெரிக்க ஜனநாயகம் - பிரவீன் சக்கரவர்த்தி ஒப்பீடு

Nov 05, 2026 - 11:01
0
மோடி வெற்றி; ட்ரம்ப் தோல்வி: இந்திய ஜனநாயகம், அமெரிக்க ஜனநாயகம் - பிரவீன் சக்கரவர்த்தி ஒப்பீடு

அமெரிக்க மிட் டேர்ம் தேர்தலில் ட்ரம்ப் கட்சி (குடியரசுக் கட்சி) பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இதை இந்திய ஜனநாயகத்தோடு ஒப்பிட்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"அமெரிக்க ஜனநாயகம்:

ட்ரம்ப் கோவிட் சூழலைச் சரியாகக் கையாளவில்லை → மக்கள் துயரப்படுகிறார்கள் → அடுத்த தேர்தலில் ட்ரம்ப் தோற்கடிக்கப்படுகிறார்.

பிரவீன் சக்கரவர்த்தி பதிவு
பிரவீன் சக்கரவர்த்தி பதிவு

பைடன் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கிறார் → 40 ஆண்டுகளில் இல்லாத உச்சக்கட்ட பணவீக்கம் உயர்கிறது → பைடன் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்படுகிறார்.

ட்ரம்ப், ஈரான் போரைத் தொடங்குகிறார் → பெட்ரோல்/கேஸ் விலைகள் ~40% உயர்கின்றன → ட்ரம்பின் கட்சி கொடூரமான தோல்வியைச் சந்திக்கிறது.

இப்படித்தான் ஜனநாயகம் இயங்க வேண்டும்.

மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டால் → ஆட்சியில் இருப்பவர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

இந்திய 'ஜனநாயகம்':

மோடி பணமதிப்பிழப்பை அறிவிக்கிறார் → 15 லட்சம் இந்தியர்கள் வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள், பொருளாதாரம் சீர்குலைகிறது → அதைத் தொடர்ந்து வந்த உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுகிறது.

மோடி கோவிட் சூழலைச் சரியாகக் கையாளவில்லை → 47 லட்சம் இந்தியர்கள் உயிரிழக்கிறார்கள் → பீகார், குஜராத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுகிறது.

மோடி பொருளாதாரத்தைச் சீர்குலைக்கிறார் → நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இளைஞர்களின் வேலையின்மைத் திண்டாட்டம் உயர்கிறது → 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுகிறது".

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User