`மாபியா அச்சுறுத்தல்; மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லாதீர்' பாலிவுட் நடிகர்களுக்கு போலீஸ் வேண்டுகோள்

Nov 10, 2026 - 18:01
0
`மாபியா அச்சுறுத்தல்; மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லாதீர்' பாலிவுட் நடிகர்களுக்கு போலீஸ் வேண்டுகோள்

மும்பையில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது சமீபத்தில் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத் துப்பாக்கிச்சூடுச் சம்பவம் தொடர்பான விசாரணையின் போது பல பாலிவுட் பிரபலங்களின் வீடுகளில் குற்றவாளிகள் உளவு பார்த்தது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக, பாலிவுட் நட்சத்திரங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், பொது இடங்களில் ரசிகர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்கவும் மும்பை போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மும்பையை சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், நடிகர்கள் பொது இடங்களுக்குச் செல்வதையும், மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் ரசிகர்களுடன் பழகுவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

அமிதாப்பச்சன்

பாலிவுட் நடிகர்கள் பலர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து மிரட்டல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். நடிகர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் நடிகர் டைகர் ஷெராப் மீதான துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர், தாக்குதலுக்கு முன்னதாக அமிதாப் பச்சன் மற்றும் சல்மான் கான் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்களின் இல்லங்களை நேரில் சென்று ஆய்வு செய்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக உள்ள பிரபலங்களை இலக்கு வைக்குமாறு துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உளவு பார்த்த சமயத்தில், வெவ்வேறு ஆட்டோ ஓட்டுநர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களை அமிதாப் பச்சன், அமீர் கான், அக்‌ஷய் குமார் மற்றும் சல்மான் கான் உள்ளிட்ட பல பிரபலங்களின் இல்லங்களுக்கு அழைத்துச் சென்றிருந்தனர். டைகர் ஷெராப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் தங்களது பாதுகாப்பை அதிகரித்துக்கொண்டுள்ளனர். மேலும் இத்துப்பாக்கிச்சூடு குறித்து அமால் மாலிக், மீகா சிங், வித்யுத் ஜம்வால், சத்ருகன் சின்ஹா ​​மற்றும் ரவி கிஷன் உள்ளிட்ட திரைப்படத் துறையைச் சேர்ந்த பலர் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User