தீபாவளிக்கு ஊருக்குச் சென்ற பானி பூரி வியாபாரி - ஓட்டைப் பிரித்து நுழைந்த கொள்ளையர்கள் கைவரிசை!
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மகன் கோவிந்தராஜ். இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி அருகில் உள்ள அவினாசி ரோடு, ராமநாதபுரம் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தானா புதூர் பகுதியில் தள்ளுவண்டியில் பானி பூரி கடை நடத்தி பிழைப்பு நடத்தி வருகிறார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது சொந்த ஊரில் திருமணம் செய்து கொடுத்த மகளின் வீட்டிற்குச் செல்ல கோவிந்தராஜ் குடும்பத்துடன் செல்ல முடிவு செய்துள்ளார். கடந்த 08-11-2026 அன்று வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நெக்லஸ் மற்றும் அரை பவுன் தங்கத் தோடு ஆகியவற்றை இரும்பு மேஜை டிராயரில் பத்திரமாகப் பூட்டி வைத்துவிட்டு, வீட்டையும் பூட்டிவிட்டு ஊருக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

தீபாவளி கொண்டாட்டங்களை முடித்துவிட்டு, நேற்று (11-11-2026) இரவு சுமார் 11.00 மணியளவில் கோவிந்தராஜ் தன்னுடைய குடும்பத்துடன் வீடு திரும்பியுள்ளார். வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் மேற்கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். தங்க நகைகள் வைத்திருந்த இரும்பு மேஜை டிராயரைச் சோதனையிட்டபோது, அது உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் ரூ.1,75,000 மதிப்புள்ள 3.5 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், மேற்கூரை ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கி இந்தத் துணிகரத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில், புளியம்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)