தாராபுரம்: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா கோவையில் திடீர் கைது! என்ன நடந்தது?

Oct 20, 2026 - 09:32
0
தாராபுரம்: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா கோவையில் திடீர் கைது! என்ன நடந்தது?

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர் கார்த்திகா. அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான இவர், ஆளுங்கட்சிக்கு எதிராக தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். அதேவேளையில், ஆளுங்கட்சி செல்வாக்கைப் பயன்படுத்தி இடைத்தேர்தல் களத்தில் த.வெ.க அத்துமீறி செயல்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இறுதிகட்ட தேர்தல் பரப்புரையின் போது தாராபுரத்தில் முதலமைச்சரின் ரோடு ஷோவை காரணம் காட்டி பல பகுதிகளுக்குச் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட மற்ற கட்சியினருக்கு காவல்துறை சார்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கார்த்திகா மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த சிலர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தாராபுரம் காவல்துறையினர் வழக்குகளை பதிவு செய்தனர். இந்த நிலையில், கோவையில் இருந்த கார்த்திகா, அவரின் கணவர் உட்பட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 6 பேரை தாராபுரம் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.

கார்த்திகா

இது குறித்து தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர், " இடைத்தேர்தல் சமயத்தில் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. முதலமைச்சர் பயணிக்கும் சாலையில் மறியலில் ஈடுபட்டது போன்ற செயல்களுக்காக கார்த்திகா உள்ளிட்ட சிலர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் உள்ள அவரது இல்லத்தில் கார்த்திகா உள்ளிட்டோரை தற்போது கைது செய்திருக்கிறோம். அடுத்தகட்ட நடவடிக்கைகள் பின்னர் தெரிவிக்கப்படும்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User