ஓசூர்: சிப்காட்டில் கட்டுமானப் பணியின்போது கான்கிரீட் ஆர்ச் சரிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!
ஓசூர் சிப்காட்டில் தனியார் நிறுவன கட்டுமானப் பணியின்போது கான்கிரீட் ஆர்ச் சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சிப்காட்-1 அமைந்துள்ள பகுதியில், எக்செல் ஆட்டோ பார்ட்ஸ் என்ற நிறுவனத்தின் ஆர்ச் கட்டுமானப் பணியின்போது, கான்கிரீட் இடிந்து விழுந்ததில் மைக்கேல், சீனிவாசன், குமரேசன் ஆகி 3 பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயங்களுடன் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு உடனே சென்ற கலெக்டர் தினேஷ்குமார், மீட்புப் பணிகளை பார்வையிட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை கேட்டறிந்தார். அவருடன் எஸ்.பி அனிதாவும் மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.

முதற்கட்ட விசாரணையில் 'முறையாக கட்டுமானப் பணி நடைபெறவில்லை, மிகவும் அலட்சியமாக வேலை நடந்துள்ளது. சம்பவம் நடந்தபோது 17 பேர் பணியில் இருந்துள்ளனர். அவர்களில் 3 பேர் உயிரிழக்க 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், சம்பந்தப்பட்ட பொறியாளர் உள்ளிட்ட ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், விபத்து நடந்த இடத்தில் வேறு யாரும் சிக்கியுள்ளனரா என்பதையும் சோதனை செய்யப்பட்டு வருகிறது' என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)