தலைமைச் செயலகத்திலும் மின்வெட்டு; இருளில் அமைச்சர்கள் அறை: 'போர்க்கால நடவடிக்கை தேவை'- அன்புமணி

Oct 12, 2026 - 14:30
0
தலைமைச் செயலகத்திலும் மின்வெட்டு; இருளில் அமைச்சர்கள் அறை: 'போர்க்கால நடவடிக்கை தேவை'- அன்புமணி

தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு பிரச்னையால் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றன.

இன்று காலை தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட மின்தடையால், முதல் தளத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலக அறைகள் இருளில் மூழ்கின. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.

இந்நிலையில் இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

அப்பதிவில், " தமிழ்நாடு முழுவதும் மக்களைப் பாதித்து வரும் மின்வெட்டு, தற்போது மாநில அரசின் தலைமையகமான தலைமைச் செயலகத்தின் செயல்பாடுகளையே முடக்கியிருப்பது பெரும் கவலையளிக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கிறது. மாநிலத்தில் எந்தப் பகுதியும் விதிவிலக்கு இல்லாமல் மின்வெட்டால் பாதிக்கப்படும் அளவுக்குச் சூழ்நிலை மோசமடைந்துள்ளது.

அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட மின்தடை, தற்போது தலைமைச் செயலகம் வரை நீடித்திருப்பது நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது. இந்தச் சூழல் உடனடியாகச் சீரமைக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் மின் தேவைகளுக்கும் மின் கிடைப்பளவிற்கும் இடையே உள்ள அதிகப்படியான இடைவெளியே இந்த மின்வெட்டுக்கு முதன்மை காரணமாகும்.

தலைமைச் செயலகத்திலும் மின்வெட்டு
தலைமைச் செயலகத்திலும் மின்வெட்டு

இந்த மின் பற்றாக்குறையைப் போக்க, முதலில் 2,000 மெகாவாட் மின்சாரமும், பின்னர் அதை 4,500 மெகாவாட்டாக உயர்த்தியும் கொள்முதல் செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. இத்தகைய அறிவிப்புகளுக்குப் பிறகும் மின்வெட்டும், தடங்கல்களும் ஏன் தொடர்கின்றன?

மின்வெட்டு என்பது அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கக்கூடிய ஒன்றாகும். எனவே, தமிழ்நாட்டில் தொடரும் இந்த மின் நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காணத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User