"125 நாள்கள் வேலைக்கு நிதி ஒதுக்கீடு எங்கே?" - மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கேள்வி | Live Updates

Jun 29, 2026 - 09:31
0
"125 நாள்கள் வேலைக்கு நிதி ஒதுக்கீடு எங்கே?" - மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கேள்வி | Live Updates

125 நாள்கள் வேலை - பெ.சண்முகம் கேள்வி

ஜூலை 1 முதல் கிராமப்புற மக்களுக்கு 125 நாட்கள் வேலை என்று மத்திய அரசு கூறியுள்ளதற்கு, அதற்கான நிதி குறித்து விமர்சனம் எழுப்பியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பெ.சண்முகம்.

"ஜுலை 1 முதல் கிராமப்புற மக்களுக்கு 125 நாட்கள் வேலை வழங்கப்போவதாக ஆரவாரமாக அறிவித்துள்ளது ஒன்றிய அரசு.

வெற்று ஆரவாரங்களால் வேலை கொடுக்க முடியாது. அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், “வெறும் கையால் முழம் போடுவோம்” என்கிறது ஒன்றிய பாஜக அரசு.

ஏழைகளை ஏமாற்றுவதும், அவர்களுக்கு எதிராகச் செயல்படுவதும்தான் பாஜகவின் கொள்கை. “கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக” என்றார் வள்ளலார். ஒன்றுபடுவோம், போராடுவோம், வெற்றி பெறுவோம்".

இன்றைய தமிழ்நாடு, இந்தியா அரசியல் நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள இந்த Live Blog-ஐ ஃபாலோ பண்ணுங்க!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User