`ரூ.38 கோடிக்கு வாட்ச்; ரூ.44 கோடிக்கு வைரம்; மொத்தம்?' - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சொத்து விவரம்

Mar 24, 2026 - 11:31
 0
`ரூ.38 கோடிக்கு வாட்ச்; ரூ.44 கோடிக்கு வைரம்; மொத்தம்?' - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சொத்து விவரம்

புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகர் மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனக்கு, ரூ.328 கோடியில் அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், 269 கோடியில் தமிழகம் இந்தியாவில் பல பகுதிகளில் அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். மொத்தம் 597 கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தற்போது வரை வெளியிடப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் ஜோஸ் சார்லஸ் மாட்டின் தான் அதிக சொத்துக்கள் கொண்ட வேட்பாளராகிறார்.

தன்னிடம் 17.5 கிலோ தங்கம் ரூ.25 கோடி மதிப்பில் இருப்பதாகவும், ரூ.44 கோடிக்கு வைரம் இருப்பதாகவும், ரூ.38 கோடிக்கு வாட்ச் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்கு ரூ.210 கோடி கடன் இருப்பதாகவும் ஜோஸ் சார்லஸ் மாட்டின் தெரிவித்துள்ளார்.

தனது மனைவிக்கும் குறிப்பிட்ட கோடிகளில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0