``முதல்வர் நடத்தியது சிறைத்துறை ஆய்வா, ஜோதிடப் பரிகாரமா?" - கைதிகள் தப்பிய விவகாரத்தில் எடப்பாடி

Oct 27, 2026 - 11:00
0
``முதல்வர் நடத்தியது சிறைத்துறை ஆய்வா, ஜோதிடப் பரிகாரமா?" -  கைதிகள் தப்பிய விவகாரத்தில் எடப்பாடி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது, இதில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 26-ம் தேதி) இரவு தேக்கம்பட்டி சிறையில் உள்ள 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பியதாக காவல்துறை தெரிவித்திருந்தது. காவல்துறையின் விசாரணையில் கைதிகள் சிறை அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. 17 கைதிகள் தப்பியோடிய நிலையில், இதுவரை 4 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய கைதிகளைத் தேடிப் பிடிக்க காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்த விவகாரம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடியதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல், அரசுக்கு நீதிமன்ற குட்டுகள் என ஏற்கனவே சட்டத்துறை சந்தி சிரிக்க, மின்வெட்டு, மின் கொள்முதலில் ஊழல் என மின்துறை Fuse பிடுங்கிய நிலையில் இருக்க, தற்போது சிறைத்துறையும் அந்த List-ல் சேர்ந்துவிட்டது.

மூன்று துறைக்கும் அமைச்சர் ஒருவர் தான் என்பது தான் இதில் Highlight! எப்போது பார்த்தாலும் “மைக்” வெறி பிடித்து அலைந்து, தூக்கத்தில் கூட “அண்ணாதிமுக புராணம்” பாடிக் கொண்டிருக்கும் அமைச்சர் நிர்மல் குமாரின் நிர்வாக லட்சணத்தைக் கண்டு ஊரே கைகொட்டிச் சிரிக்கிறது. வெட்கக்கேடு! ஏற்கனவே புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய போதே தமிழக சிறைகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் இந்த அரசுக்கோ, அமைச்சருக்கோ நேரம் இல்லை போலும்!

அமைச்சர் நிர்மல் குமார்

அது சரி, புழல் ஜெயிலுக்கு Inspection எல்லாம் போனீர்களே முதல்வர் விஜய் அவர்களே... நீங்கள் ஆய்வு நடத்தியுமா சிறைத்துறை இப்படி இருக்கிறது? நீங்கள் நடத்தியது ஆய்வு தானா? அல்லது, சில பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் போல ஜோதிடப் பரிகாரமா? கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடும் நிலையில் தான் சிறைச்சாலையே இருக்கிறது என்றால், சாமானிய மக்கள் செல்லும் சாலைகளிலே இந்த திக்குத் தெரியாத ஆட்சியில் எப்படி பாதுகாப்பு இருக்கும்?

அதிகரிக்கும் கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆளுங்கட்சி நிர்வாகியின் போதைப்பொருள் புழக்கம், தொடர்ந்து மாயமாகும் குழந்தைகள், சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட்டம், இவற்றை எல்லாம் தொகுத்து இன்றைய ஆச்சரியக்குறி ஆட்சியாளர்கள் “150 நாள் வெற்றி மலர்” வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை! தப்பியோடிய கைதிகளை பிடித்து மீண்டும் சிறையில் அடைப்பதுடன், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கில் ஒழுங்காக கவனம் செலுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User