ஆரஞ்சு அலர்ட் மீறல்; 'நோ' ஜாக்கெட் - மத்திய பிரதேச க்ரூஸ் விபத்து காரணங்கள்; 5 தமிழர்கள் உயிரிழப்பு

May 02, 2026 - 19:57
0
ஆரஞ்சு அலர்ட் மீறல்; 'நோ' ஜாக்கெட் - மத்திய பிரதேச க்ரூஸ் விபத்து காரணங்கள்; 5 தமிழர்கள் உயிரிழப்பு

நேற்று முன்தினம் (ஏப்ரல் 30), மத்திய பிரதேசம் பர்கி அணையில் க்ரூஸ் விபத்து ஒன்று நடந்தது. அது இரவு 6 - 6.30 மணியளவில் நடந்துள்ளது.

இந்த விபத்திற்கு காரணம் என்ன?

க்ரூஸ் விபத்து கமாரியா தீவிற்கு அருகே நடந்துள்ளது.

இந்த விபத்திற்கு அந்தப் பகுதியில் மணிக்கு 60-70 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றே காரணம் என்றும், இந்தக் காற்றால் க்ரூஸ் நிலைதடுமாறி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

இதுவரை இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 5 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இன்னும் மூன்று குழந்தைகள் உள்பட நான்கு பேர் காணவில்லை. விபத்து நடந்த பகுதியில் கடும் மழை பெய்ததால், நேற்று தடைப்பட்ட மீட்புப்பணி இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று
பலத்த காற்று

வெளியாகியுள்ள வீடியோ

இந்த விபத்து நடந்த சமயத்திலான குறிப்பிட்ட க்ரூஸின் வீடியோ வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில்...

க்ரூஸில் பயணித்த சிலர் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் அமர்ந்திருக்கின்றனர்.

க்ரூஸ் கொஞ்சம் மூழ்கி, தண்ணீர் கப்பலுக்கு வந்துகொண்டிருக்கும் போது, க்ரூஸ் பணியாளர்கள் லைஃப் ஜாக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்குகின்றனர்.

ஆனால், சட்டப்படி, க்ரூஸ் பயணம் தொடங்குவதற்கு முன்பே, பயணிகளுக்கு லைஃப் ஜாக்கெட் வழங்கப்பட்டிருக்க வேண்டும்... அவர்களும் அணிந்திருக்க வேண்டும்.

ஆனால், இந்தச் சட்டத்தை குறிப்பிட்ட க்ரூஸ் மீறியிருக்கிறது.

இன்னும் தவறுகள்..!

குறிப்பிட்ட க்ரூஸ் 40 பயணிகளுக்கு மேல் பயணித்திருக்கின்றனர். ஆனால், 29 பேருக்கு மட்டும் தான் டிக்கெட் வழங்கப்பட்டிருக்கின்றன.

பர்கி டேம் பகுதிக்கு இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதை மீறியும் அந்தக் க்ரூஸ் பர்கி டேம் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விபத்தையடுத்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் மத்திய பிரதேசம் முழுவதும் க்ரூஸ் பயணங்களை ரத்து செய்துள்ளார்.

குறிப்பிட்ட கப்பலின் ஓட்டுநர், உதவியாளர் மற்றும் டிக்கெட் கவுண்டர் இன்சார்ஜ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User