"இரண்டு தலைமுறைக்கு விஜய் ஆட்சியில் இருப்பார், உறுதியாகச் சொல்கிறேன்!" - இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

May 14, 2026 - 12:01
0
"இரண்டு தலைமுறைக்கு விஜய் ஆட்சியில் இருப்பார், உறுதியாகச் சொல்கிறேன்!" - இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

'Silent Influencer' என்ற ஆல்பம் வெளியீட்டில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.வி உதயகுமார் முதல்வர் விஜய் குறித்து பேசியிருக்கிறார்.

" நம்பிக்கை வாக்கெடுப்பில் மீண்டும் மாபெரும் வெற்றியை அவர் நிரூபித்துக் காண்பித்திருக்கிறார்.

நமது மாண்புமிகு முதல்வர், கலை உலக சகோதரர் திரு. விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

நிறைய ஹீரோக்கள் முயற்சி செய்தும் முடியாததை, முதல் முயற்சியிலேயே சாதித்த ஒரு முதல்வராக இன்றைக்கு விஜய் அவர்கள் இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

புரட்சி தலைவர் விஜய்க்கு பிறகு விஜய் தான் அதனை சாதித்துக் காட்டியிருக்கிறார். நிறைய பேர் இதை ஏற்றுக்கொள்ள கஷ்டப்படுவார்கள்.

ஏன் விஜய் அரசியலுக்கு வரக்கூடாது, அவர் வரட்டும். மாற்று அரசியலைத் தரட்டும் என்று நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.

நிச்சயமாக இன்னும் இரண்டு தலைமுறைகளுக்கு அவர் ஆட்சியில் இருப்பார் நான் உறுதியாக சொல்கிறேன்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

ஏனென்றால் அவரிடம் அந்த வேகம் இருக்கிறது. அற்புதமான விவேகம் இருக்கிறது. அந்த விவேகத்திற்கு இனி தோல்வியே இருக்காது.

நம் குடும்பத்தில் இருந்து ஒருவர் வந்திருக்கிறார். அவரை வாழ்த்துவோம்" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User