`விஜய் தம்முடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார்; அமைச்சரவையில்..!' - திருமாவளவன் சொன்ன பதில்!

May 20, 2026 - 14:32
0
`விஜய் தம்முடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார்; அமைச்சரவையில்..!' - திருமாவளவன் சொன்ன பதில்!

தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பங்கும் முக்கியமான ஒன்று.

தமிழ்நாடு அமைச்சரவையில் முதல்வர் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில், இன்னும் சிலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்பார்கள் என்பது தெரிகிறது.

தற்போது வெளியாகி உள்ள தகவல்களின் படி, காங்கிரஸ், விசிக அமைச்சரவையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

விஜய் - திருமாவளவன்
விஜய் - திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைச்சரவையில் இணையுமா என்கிற கேள்விக்கு அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் பதில்...

"ஆதவ் அர்ஜூனாவின் அமைச்சரவை அழைப்பிற்கு நன்றி. எங்கள் கட்சியின் உயர்நிலைக் குழு கடந்த 8-ம் தேதி மாலை 6 மணிக்கு கூடியது.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் 'அமைச்சரவையிலும் இடம் பெற வேண்டும்' என்கிற கருத்தை முன்மொழிந்தது அனைவருக்கும் அறிந்ததே.

ஆனாலும் நிறைவாகத் தலைவர் எடுக்கிற முடிவுக்கு கட்டுப்படுகிறோம் என்கிற உறுதியைத் தந்தார்கள்.

அதன் அடிப்படையில் 9-ம் தேதி பொதுச் செயலாளர்கள் இரண்டு பேரோடும் கலந்து பேசி, ஆட்சி அமைப்பதற்கு மட்டுமே நம்முடைய ஆதரவை நல்குவது என்கிற நிபந்தனையற்ற ஆதரவை நாங்கள் நல்கினோம்.

பதவி ஏற்புக்குப் பிறகு வேளச்சேரிக்கு வருகை தந்த விஜய் தம்முடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

அதை இப்போது மீண்டும் வெளிப்படையாக ஆதவ் அர்ஜுனா வழிமொழிந்திருக்கிறார்.

இது குறித்து எமது முன்னணி பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர்கள், மாநில பொருளாளர், முதன்மை செயலாளருடன் கலந்து பேசிய பின்னர் எங்கள் முடிவை அறிவிப்போம்". என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User