"தளபதி முகத்துக்கான வெற்றி, தவெகவை அசைக்க முடியாது" - கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ கருத்து

Oct 09, 2026 - 17:30
0
"தளபதி முகத்துக்கான வெற்றி, தவெகவை அசைக்க முடியாது" - கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ கருத்து

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது குறித்து, கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் கூறியதாவது, “இது எதிர்பார்த்த வெற்றிதான். தளபதியின் கால் பட்டு வெற்றி பெறாமல் இருக்குமா? இது மகத்தான வெற்றி.

என் சொந்த தொகுதியில் வெற்றி பெறும்போதுகூட இந்த அளவுக்கு நெகிழ்ச்சி ஏற்பட்டதில்லை. தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் கிடைத்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தை இனி அசைக்க முடியாது என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இந்த வெற்றி தளபதி விஜய்யின் முகத்திற்காகவும், அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்காகவும் கிடைத்த வெற்றியாக இருக்கும். மக்கள் தங்களுடைய ஞானத்துடனும் தெளிவான சிந்தனையுடனும் முடிவெடுத்து நிற்கிறார்கள் என்பதை இந்த வெற்றி வெளிப்படுத்துகிறது.

எங்களைப் பொறுத்தவரை, விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் எப்போதுமே வார்த்தைகளால் பதிலளிப்பதைவிடச் செயலின் மூலமாகவே பதிலளிப்போம். தாராபுரம் மற்றும் மதுராந்தகம் வெற்றிகள் த.வெ.க தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து கட்சியின் அரசியல் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User