வேலூர்: பைக் விபத்தில் மூளைச்சாவு; 18 வயது கல்லூரி மாணவனின் உடல் உறுப்புகள் தானம்!

Jun 17, 2026 - 15:01
0
வேலூர்: பைக் விபத்தில் மூளைச்சாவு; 18 வயது கல்லூரி மாணவனின் உடல் உறுப்புகள் தானம்!

வேலூர், சேண்பாக்கம் செல்லியம்மன் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். காஸ் ஏஜென்சியில் ஓட்டுநராக வேலைச் செய்து வருகிறார். இவரது மனைவி பவானி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள். இரண்டாவது மகன் ரித்தீஷ். வயது 18. பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில், வாலாஜாபேட்டை அருகே பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார் மாணவன் ரித்தீஷ். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரித்தீஷின் உடல்நிலை கடலைக்கிடமானதையடுத்து, மேல்சிகிச்சைக்காக ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மாணவன் ரித்தீஷ்

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், நேற்றைய தினம் ரித்தீஷுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரின் உடல் உறுப்புகளை பிறருக்குத் தானமாக வழங்க அவரின் குடும்பத்தினர் முன்வந்தனர்.

இதையடுத்து, மாணவனின் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் இடது சிறுநீரகம் ஆகியவை சி.எம்.சி மருத்துவமனைக்கும், வலது சிறுநீரகம் ரேலா மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கும், கண்கள் சி.எம்.சி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மாணவன் ரித்தீஷின் உடல் உரிய மரியாதையுடன் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User