மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட வானதி சீனிவாசன் – கோவை வடக்கு நிலவரம் என்ன?

May 04, 2026 - 12:31
0
மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட வானதி சீனிவாசன் – கோவை வடக்கு நிலவரம் என்ன?

கோவை வடக்கு தொகுதியில் தி.மு.க-வில் துரை செந்தமிழ் செல்வன், பா.ஜ.க-வில் வானதி சீனிவாசன், த.வெ.க-வில் சம்பத் குமார், நா.த.க-வில் நர்மதா போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்னிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 939 ஆக உள்ள நிலையில், தேர்தலில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 222 பேர் வாக்களித்தனர். இதனால் வாக்கு சதவிகிதம் 75.51 ஆக உள்ளது.

2011ம் ஆண்டு முதல் கோவை வடக்கு தொகுதி சந்தித்த 3 சட்டமன்ற தேர்தல்களிலும் அ.தி.மு.க-வே வெற்றி பெற்றுள்ளது. கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வானதி சீனிவாசன், தொகுதி மாறி கோவை வடக்கு தொகுதியில் இந்த முறை போட்டியிட்டார். இன்று காலை முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் வானதி சீனிவாசன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். த.வெ.க. வேட்பாளர் சம்பத் குமார் முன்னிலை வகித்து வரும் நிலையில், தி.மு.க. வேட்பாளர் துரை செந்தமிழ் செல்வன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதனால் வானதி சீனிவாசன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இது பா.ஜ.க. தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User