"'மூக்குத்தி அம்மன்' படத்துக்கு 3 டிக்கெட் வசனத்தை சூர்யா சார் நீக்கச் சொன்னார்!" - ஆர்.ஜே. பாலாஜி

May 30, 2026 - 13:02
0
"'மூக்குத்தி அம்மன்' படத்துக்கு 3 டிக்கெட் வசனத்தை சூர்யா சார் நீக்கச் சொன்னார்!" - ஆர்.ஜே. பாலாஜி

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வசூலை அள்ளிக்கொண்டிருக்கிறது. திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகியும் படத்திற்கு மக்களின் வரவேற்புக் கிடைத்து வருகிறது.

த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா ரவி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். படத்தின் ரிலீஸுக்குப் பிறகு நம் சினிமா விகடன் சேனலுக்கு ஆர்.ஜே. பாலாஜி பேட்டியளித்திருக்கிறார்.

Karuppu BTS
Karuppu BTS

'நானும் ரௌடிதான்' திரைப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 'அஞ்சான் படத்திற்கு 5 டிக்கெட் இருக்கு வர்றீயா' என நகைச்சுவையாக ஒரு வசனம் பேசியிருப்பார்.

இதுபோல, இந்தப் படத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் 'முக்குத்தி அம்மன்' படத்துக்கு 3 டிக்கெட் இருக்கு வர்றீயா என சூர்யா ஜாலியாக சொல்லும் ஒரு வசனம் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வசனம் பற்றி ஆர்.ஜே. பாலாஜி, "சூர்யா சார் அந்த வசனத்தைப் பேசவே மாட்டேன்னு சொல்லிட்டார். நான் நடிச்ச வெவ்வேறு படங்களுடைய டைட்டில் சொல்லிப் பேசச் சொன்னேன்.

ஆனா, அவர் பண்ண மாட்டேன்னு உறுதியாகச் சொன்னார். 'கருப்பு' படத்தின் ரிலீஸுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி அந்த வசனத்தை நீக்கச் சொல்லிட்டார். இன்னொருத்தருடைய படத்தை நான் கலாய்க்கக் கூடாதுனுதான் அவர் பேச மாட்டேன்னு சொன்னார்.

RJ Balaji Interview
RJ Balaji Interview

நான்தான் அந்தப் படத்தை டைரக்ட் பண்ணினேன்னு பேசச் சொன்னேன். தியேட்டர்ல அந்த வசனத்தை எல்லோரும் என்ஜாய் பண்றாங்க. ஆனால், 'முக்குத்தி அம்மன்' படம் ஓடிடியில் ரிலீஸ் ஆச்சு.

இந்த இடத்துல லாஜிக்கலாக மக்கள் யோசிக்க மாட்டாங்கனு நம்பினேன். ஏன்னா, சினிமா ஒரு மேஜிக். அதுபோல, சூர்யா சார் சில விஷயங்களுக்கு மட்டும் 'இதை கண்டிப்பா பேசணுமா'னு கேட்பார். பிறகு நான்தான் அவரைப் பேச வைப்பேன். அதுக்கு நானே பொறுப்பெடுத்துக்கிறேன்" எனப் பேசினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User