ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர்: தற்காப்பு எனும் பெயரில் ஐரோப்பிய நாடுகளும் இணைகிறதா?

Mar 2, 2026 - 16:31
 0
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர்: தற்காப்பு எனும் பெயரில் ஐரோப்பிய நாடுகளும் இணைகிறதா?

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்துள்ள போர் மூன்றாவது நாளாக இன்று தொடர்ந்து வருகிறது.

ஈரானில் தொடங்கிய போர் அன்றே மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவி... அங்கேயும் இன்னமும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், ஐரோப்ப நாடுகளும் இந்தப் போரில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. அந்த நாடுகள் - பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி.

இந்த மூன்று நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

"ஆரம்பத்தில் அமெரிக்கா, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் ஈடுபடாத நாடுகளிலும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

ஈரான் மீதான போர்
ஈரான் மீதான போர்

ஈரானின் இந்தப் பொறுப்பற்ற தாக்குதல்கள் எங்களது நெருங்கிய கூட்டாளிகளை குறி வைப்பதோடு, பிராந்தியத்தில் இருக்கும் எங்களது படைவீரர்களையும், மக்களையும் பயமுறுத்துகின்றன.

இந்தத் தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி ஈரானைக் கேட்டுக்கொள்கிறோம்.

எங்களது நலம் மற்றும் எங்களது கூட்டாளிகளின் நலனைக் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுப்போம்.

இந்த விஷயத்தில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுடன் இணைந்து எங்களின் தற்காப்புக்காக பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளோம்". எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் கப்பற்படை தளம் ஒன்று அமீரகத்தில் ஈரானிய தாக்குதலில் சேதமடைந்தது எனத் தகவல் வெளியானது. மேலும் பிரிட்டன் இரண்டு ஏவுகணைகளை இடைமறித்ததாகவும் சொல்லப்படுகிரது. இதனிடையே பிரிட்டன் பிரதமர் பிரிட்டிஷ் தளங்களை அமெரிக்கா "தற்காப்பு" நோக்கில் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார். எனினும் இது தற்காப்பு மட்டுமே தான் எனவும், தாக்கி அழிக்கும் போரில் பிரிட்டன் ஈடுபடவில்லை, இனியும் ஈடுபடாது எனத் தெரிவித்தார்,

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0