TVK: 'சென்னைவாசி, சிபி சத்யராஜின் ஆதரவு' - சிங்காநல்லூரை வென்ற ஸ்ரீ கிரி பிரசாத்தின் பின்னணி என்ன?

May 05, 2026 - 14:00
0
TVK: 'சென்னைவாசி, சிபி சத்யராஜின் ஆதரவு' -  சிங்காநல்லூரை வென்ற ஸ்ரீ கிரி பிரசாத்தின் பின்னணி என்ன?

சிங்காநல்லூர் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 69 ஆயிரத்து 941 வாக்காளர்களில், தேர்தலில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 746 பேர் வாக்களித்தனர். இதில் த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீ கிரி பிரசாத் 84 ஆயிரத்து 163 வாக்குகள் பெற்று, 19 ஆயிரத்து 139 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

65,024 வாக்குகள் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீ நிதி இரண்டாம் இடத்தையும், 57,783 வாக்குகள் பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

சிங்காநல்லூர் தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க, தி.மு.க. தலா 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பிரஜா சோசலிஸ்ட் கட்சி தலா 2 முறையும், ஜனதா கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

vijay
vijay

முதல் முறையாக சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்ரீ கிரி பிரசாத், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார். சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ கிரி பிரசாத் (43), வழக்கறிஞராக இருந்து வருகிறார்.

தேர்தல் பரப்புரையின் போது இவருக்கு ஆதரவாக நடிகர் சிபி சத்யராஜ், குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User